"சீன ரக மண முறிவு" எனும் தொலைக்காட்சி நாடகத்தில், குடும்பத்துக்காக தன்னை தியாகம் செய்யும் ஆசிரியை லின் சியௌ வென் எனும் கதா பாத்திரத்தை சியாங் வென் லி ஏற்று நடிக்கிறார். தம் கணவர், மகன் ஆகியோருக்காக அவர் எல்லை கடந்து தன்னை அர்ப்பணித்தாள். ஆனால் தன் கணவர் தம் பணியில் மேன்மேலும் பெரும் சாதனை நிகழ்த்தும் போது அவள் தமது பணியை இழந்தாள். அது முதற்கொண்டு, அவர் சரிசமமற்ற மனோ நிலையை அடைந்து, தன் கணவர் மீது இடைவிடாமல் ஐயம் கொண்டு தம் கணவரைக் கட்டுப்படுத்தும் அளவுக்குச் சென்றாள். இறுதியில் விழிப்புணர்வு அடைவதற்கு காலம் கடந்து விட்டது. கடுமையாகத் துன்புறுத்தப்பட்ட அவளுடைய கணவர் அவளை மன்னிக்க வில்லை. இறுதியில் மன முறிவு ஏற்பட்டது.
இக்கதா பாத்திரத்தை ஏற்று நடிப்பது பற்றி சியாங் வென் லி கூறுகிறார்—
"நாடகச் சுவடியைப் படிக்கும் போது, இக்கதா பாத்திரம் இவ்வளவு தான் என்று நான் உணர்ந்து கொண்டேன். ரசிகர்கள் எவ்வாறு என்னைப் பார்ப்பது என்பது பற்றி நான் நினைக்கவே இல்லை. உண்மையில் நடிகர் என்ற முறையில் சில சமயம் தன்னை தானே தாண்டிச் செல்ல வேண்டும். இது மிகவும் சிரமம் என்பது உண்மை" என்றார் அவர்.
சியாங் வென் லி அறைகூவலுடன் கூடிய கதா பாத்திரத்தை ஏற்று நடிக்க விரும்புகிறார். அவர் ஏற்று நடித்த திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நாடகப் படைப்புகள், அவளுடைய நடிப்புத் திறனை முற்று முழுதாக வெளிக்காட்டியுள்ளன. அண்மையில் "தைவானின் கடந்த கால நிகழ்ச்சிகள்" எனும் திரைப்படத்தில் அவர் கதா நாயகியாக நடித்ததால் சீன திரைப்பட துறையின் அரசு விருதான "குவா பியௌ" தலைசிறந்த நடிகை விருது பெற்றார். அவரைப் பொறுத்த வரை விருது பெறுவது இது இரண்டாவது முறையாகும். அன்றி, சீன திரைப்படத் துறையின் பல்வகை விருதுகளில் அவர் பல முறை பரிசு பெற்றார். "சீனாவின் ஆற்றல் மிக்க நடிகையரில் ஒருவர்" என அவர் கருதப்படுகிறார்.
1 2 3
|