10 ஆண்டுகளாக சியாங் வென் லி திரைப்படத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் அவருடைய படைப்புக்கள் அதிகமில்லை. திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நாடக கதா பாத்திரங்களை ஏற்று நடிப்பதில் அவர் கண்டிப்பான கோரிக்கை கொண்டிருப்பது இதற்கு காரணம். ஆனால் தாம் விரும்பும் கதா பாத்திரங்களைக் கண்டறியும் போதெல்லாம், அவர் முழு மூச்சுடன் அதில் ஈடுபடலானார். அவர் பலவிதமான கதா பாத்திரங்களைப் படைத்துள்ளார். ஆனால் இவை அனைத்தும் பழைய மாதிரி அல்ல. அவர் படைக்கும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் உயிர் துடிப்பு மிக்கது. அவர் நடித்த கதா பாத்திரங்களை ரசிகர்கள் கண்டு மகிழும் போது, தமது அருகிலுள்ள ஒரு பரிச்சயமுடையவர் மேடையில் இருக்கிறார் என்ற உணர்வு ஏற்படும். சியாங் வென் லி திரையில் காட்டும் இன்பதுன்பங்கள், வெவ்வேறான கோணத்திலிருந்து சீனாவின் நவ சமுதாயத்திலுள்ள பலவிதமான மகளிரின் வாழ்க்கை நிலையையும் மன குரலையும் வெளிக்காட்டுகின்றன.
சியாங் வென் லியின் குடும்பம் இன்பமயமானது. அவருடைய கணவர் சீனாவின் புகழ் பெற்ற நிழல் படம் பிடிக்கும் வல்லுநராவார். அவர்களுக்கு 3 வயதான மகன் உள்ளான். சியாங் வென் லி திரைப்படம் தயாரிக்கும் போது அடிக்கடி தம் மகனைக் கூட்டிச் செல்வதுண்டு. இப்படி செய்தால் தான், தமது மகன் எந்நேரத்திலும் தாய் அன்பை அனுபவிக்கலாம் என்று அவர் கருதுகிறார். 30 வயது அடைந்த போது தான், உண்மையான இன்பம் அனுபவிக்க முடிந்தது என்று அவர் கூறினார். வாழ்க்கை தான் தமக்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கொண்டு வந்துள்ளது. "மகளிர் சுய நம்பிக்கையைக் கொண்டிருக்க வேண்டும். வெவ்வேறான காலக்கட்டத்தில் வெவ்வேறான அழகு உண்டு. உண்மையான அழகு உள்ளத்திலிருந்து தான் கிளம்புகின்றது" என்று சியாங் வென் லி கூறினார். 1 2 3
|