• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-17 18:01:41    
Liao Ning மாநிலத்து அரசு சார் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி

cri

Dong Bei மருந்து தயாரிப்பு குழுமம்

வட கிழக்கு சீனாவின் Liao Ning மாநிலத்து Shen Yang மாநகரின் Tie Xi பிரதேசத்தில் சுமார் 100 பெரிய மற்றும் நடுத்தர ரக அரசு சார் தொழில் நிறுவனங்கள் செறிந்திருக்கின்றன. சீனாவின் முக்கிய சாதன ஆக்க தொழில் துறை தளம் இதுவாகும். வட கிழக்கு பிரதேசத்தை வளர்ச்சியுறச்செய்வது பற்றிய கொள்கையை சீன அரசு முன்வைத்த பின், Liao Ning மாநிலத்து அரசு சார் தொழில் நிறுவனங்கள் மேலும் உயிர்த்துடிப்புடன் இயங்குகின்றன.

Dong Bei மருந்து தயாரிப்பு குழுமமானது, Tie Xi பிரதேசத்திலுள்ள ஒரு பெரிய ரக அரசு சார் தொழில் நிறுவனமாகும். கடந்த சில ஆண்டுகளில், சீரமைப்பு மூலம், இத்தொழில் நிறுவனத்தின் பயன் மேம்பட்டு வருகின்றது. உற்பத்தி பொருட்களின் போட்டி போடும் திறன் இடைவிடாமல் வலுப்பட்டு வருகின்றது. தற்போது, இக்குழுமம், உலக வைட்டமின் C சந்தையின் முக்கிய வினியோக நிறுவனங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இத்தொழில் நிறுவனத்தின் நிர்வாகி Feng Yan அம்மையார் கூறியதாவது:

"சர்வதேச சந்தையில், Dong Bei மருந்து தயாரிப்பு குழுமத்தில் தயாராகும் வைட்டமின் C யின் பங்கு 20 விழுக்காடு ஆகும். சர்வதேச சந்தையின் தேவைக்கேற்ப, வாய்ப்பை இறுகப்பற்றி, ஆராய்ச்சி மூலம், சர்வதேச சந்தையை மதிப்பீடு செய்து, தொழில் நுட்பத்தை சீராக்கி, முதலீடு செய்துள்ளோம். உலகில் மிக பெரிய வைட்டமின் C உற்பத்தி நுட்பத்தை உருவாக்கியுள்ளோம். போட்டிபோடும் திறனை வளர்க்க பல்வகை இலக்குகளை நிர்ணயித்துள்ளோம். கடந்த சில ஆண்டுகளில் தொழில் நுட்ப சீர்திருத்தம் மூலம், அமைப்பு முறையிலும் தொழிலாளர்களையும் ஊழியர்களையும் வேலைக்கு அமர்த்தும் விதி முறையிலும் மாற்றம் காணப்பட்டுள்ளது. இக்குழுமத்தின் நிலை பெரிதும் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் எங்கள் உற்பத்தி பொருட்களின் போட்டியாற்றல் பெரிதும் வலுப்பட்டுள்ளது." என்றார் அவர்.

Dong Bei மருந்து தயாரிப்பு குழுமம் போன்ற பெரிய ரக அரசு சார் தொழில் நிறுவனங்கள் Liao Ning மாநிலத்தில் சில உள்ளன. 2003ஆம் ஆண்டில், சீனாவின் வட கிழக்கு பிரதேசத்தில், பழைய தொழில் தளத்தை வளர்ச்சியுறச்செய்வது பற்றிய கொள்கையை சீன அரசு வகுத்தது. சீர்திருத்த மற்றும் வெளிநாட்டு திறப்புப் பணி செய்யப்பட்ட பின், இப்பிரதேசத்து அரசு சார் தொழில் நிறுவனங்களின் செயல்துடிப்பும் போட்டியாற்றலும் போதாமை உள்ளிட்ட பிரச்சினைகளை முக்கியமாகக் தீர்க்க வேண்டும். சீனாவின் பல்வேறு பிரதேசங்களின் பொருளாதாரம் ஒரே சீராக சம நிலையில் ஒருங்கிணைந்து வளர்ச்சியுறுவதற்குத் துணை புரிவது இதன் நோக்கமாகும்.

1  2  3