
தெற்கு Liao Ning மாநிலத்தின் துறைமுகமான Da Lian நகரில் சீனாவின் மிக பெரிய கன ரக தொழிற்துறை தொழில் நிறுவனமான Da Lian குழுமம் அமைந்துள்ளது. தொழில் நிறுவனம் வளர்ச்சியடைய வேண்டுமாயின், வெளிநாட்டுத் திறப்புப் பணியையும், தொழில் நுட்ப நிலையை உயர்த்துவதையும் விரைவுபடுத்த வேண்டும் என்று இக்குழுமத்தின் தலைமை மேலாளர் Qi Yu Min கருதுகின்றார். அவர் கூறியதாவது:

"வெளிநாட்டுத் திறப்புப் பணி மூலம், கட்டமைப்பை சரிப்படுத்தி, தொழில் நுட்ப நிலையை நாங்கள் உயர்த்த வேண்டும். எங்கள் தொழில் நுட்ப நிலையை உயர்த்தும் பொருட்டு, உலக பக்குவமிக்க தொழில் நுட்பத்தை நாங்கள் உட்புகுத்த வேண்டும்" என்றார் அவர்.
தொழில் நிறுவனத்தின் தொழில் நுட்ப புத்தாக்கத்தை விரைவுபடுத்தும் பொருட்டு, Dalian குழுமம் உலகளவில் திறமைசாலிகளை வேலைக்கு அமர்த்தி, உயர் நிலை தொழில் நுட்ப வல்லுநர்களையும் நிர்வாகிகளையும் அதிக ஊதியத்துடன் அமர்த்தியுள்ளது. திறமைசாலி, தொழில் நிறுவனத்தின் மிக முக்கிய செல்வமாகும்" என்று Qi Yu Min கருதுகின்றார்.

தற்போது, பல்வகை திறமைசாலிகளுக்கு மேலும் நல்ல சூழல், வளர்ச்சிக்கான மேலதிக வாய்ப்பு மற்றும் முன்னுரிமையுடன் கூடிய அணுகு முறையை Liao Ning மாநிலத்து பவ்வேறு பெரிய ரக அரசு சார் தொழில் நிறுவனங்களின் தலைமை மேலாளர்கள் வழங்கியுள்ளனர். இதன் காரணமாக, 2004ஆம் ஆண்டு இப்பிரதேசத்தின் அரசு சார் தொழில் நிறுவனங்கள், திறமைசாலிகள் பலரை ஈர்த்துள்ளன.
வட கிழக்கு பிரதேசத்தை வளர்ச்சியுறச்செய்யும் சீன அரசின் கொள்கை ஊக்கத்துடன், அரசு சார் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் பல வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இது, இத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு சிறந்த சூழலை உருவாக்கியுள்ளது. Liao Ning மாநிலத்தின் அரசு சார் தொழில் நிறுவனங்கள் மீண்டும் செயல்துடிப்புடன் இயங்குகின்றன. 1 2 3
|