• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-17 18:01:41    
Liao Ning மாநிலத்து அரசு சார் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி

cri

வட கிழக்கு பிரதேசத்தை வளர்ச்சியுறச்செய்யும் கொள்கையில், 100 பெரிய ரக தொழிற்துறை கட்டுமான திட்டப்பணிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. Liao Ning மாநிலத்தில் 50க்கு அதிகமான இத்தகைய திட்டப்பணிகள் இடம்பெறுகின்றன. இம்மாநிலத்தின் அரசு சார் தொழிற்துறைக்கு வலுவான அடிப்படையும் ஆற்றலும் உண்டு. பரந்த வளர்ச்சி எதிர்காலமும் இம்மாநிலத்துக்கு உண்டு என்பதை இது காட்டுகின்றது.

சீனாவின் அரசு சார் தொழில் நிறுவனத்தின் சீர்திருத்தத்தில் Liao Ning மாநில அரசு அதிகப்படியான பணி மேற்கொண்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில், சரிப்படுத்துவது, மாற்றியமைப்பது, சமூக காப்பீட்டை வலுப்படுத்துவது உள்ளிட்ட வழிமுறைகள் மூலம், தொழில் நிறுவனங்களின் சுமையை இம்மாநிலம் குறைத்து, அவற்றின் வளர்ச்சியை விரைவுபடுத்தியுள்ளது. இப்போது, வட கிழக்கு பிரதேசத்து பழைய தொழிற்துறை தளத்தை வளர்ச்சியுறச்செய்வது பற்றிய கொள்கையை சீன அரசு முன்வைத்தது. இது, Liao Ning மாநிலத்து அரசு சார் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு சிறந்த நிலைமையை உருவாக்கும் என்று இம்மாநிலக் கட்சி கமிட்டியின் துணைச் செயலாளர் Wang Wan Bin கருதுகின்றார். அவர் கூறியதாவது:

"Liao Ning மாநிலத்தின் பொருளாதார கட்டமைப்பின் சீரமைப்பை இக்கொள்கை பெரிதும் விரைவுபடுத்தி, அரசு சார் பொருளாதாரத்தின் நெடுநோக்கு சரிப்படுத்தலையும், அரசு சார் தொழில் நிறுவனங்களின் மாற்றியமைப்பையும் மேலும் முன்னேற்றும். சீனாவில் முக்கிய சாதன ஆக்க தொழில் துறை, மூலப் பொருள், மற்றும் அரை உற்பத்தி பொருட்கள் தொழிற்துறை தளமாக Liao Ning மாநிலம் மாறுவதை இது விரைவுபடுத்தும். குறிப்பிடத்தக்க ஆதாரத் தொழில் துறையையும் சர்வதேச சந்தையின் போட்டியில் வலுவான ஆற்றலுடைய முக்கிய தொழில் நிறுவனங்களையும் உருவாக்க இது துணை புரியும்" என்றார் அவர்.

இக்கொள்கை நடைமுறைக்கு வந்த ஓராண்டில் Liao Ning மாநிலத்து அரசு சார் தொழில் நிறுவனங்களில் குறிப்பிடத்தக்க மாற்றம் காணப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களின் பொருளாதார நலன், தொழில் நிறுவனங்களின் சூழல், தொழிலாளர்களின் கட்டுக்கோப்பு ஆகியவை பெரும் மாற்றமடைந்துள்ளன. இனிமேல், புதிய தொழில் நுட்பத்தைப் புகுத்தி, ஆராய்ந்து, வளர்ச்சியுறச்செய்யும் ஆற்றலை இத்தொழில் நிறுவனங்கள் வலுப்படுத்தி, தமது போட்டியாற்றலை இடைவிடாமல் உயர்த்தும்.

1  2  3