• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-24 12:33:47    
உலக வங்கி துணை தலைவரின் பேட்டி

cri
முதலாவது பகுதி

2005ம் ஆண்டு உலகளவிலான பொருளாதாரத்தின் எதிர்காலம் என்ற தலைப்பிலான அறிக்கையை உலக வங்கி 2004ம் ஆண்டின் டிசெம்பர் திங்களின் நடுவில் வெளியிட்டது. உலக பொருளாதாரத்தை விரைவுப்படுத்துவதற்கு அழிக்காத பங்கை சீன பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்சி ஆற்றியுள்ளது என்று அறிக்கை பாராட்டுகின்றது. உலக வங்கி இவ்வாறு சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சி பற்றி மதிப்பிடுவது குறித்து குவான் சின்யூ எனும் செய்தித் தாளின் செய்தியாளர் உலக வங்கியின் துணை தலைவர் டாக்டர் மைக் கிரேனைப் பேட்டிக் கண்டார்.

செய்தியாளர்...சீனப் பொருளாதாரத் துறையிலான கட்டுப்பாட்டு நடவடிக்கை பூர்வாங்கரீதியில் பயன் தந்துள்ளது. சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சி 2004ம் ஆண்டில் 9.25 விழுக்காட்டை எட்டலாம் என்று மதிப்பீடு செய்யப்பட்டது. 2005ம் ஆண்டு இது 8 விழுக்காடாக அதிகரிக்கக் கூடும். சீனப் பொருளாதாரம் கட்டுப்பாட்டுடன் வளர்ச்சியடையும் என்பது பற்றி தங்கள் கருத்து என்ன?

கிரேன்...அளவுக்கு மீறி வளர்ந்த பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் வகையில் சீன அரசு நிர்வாக கட்டுப்பாட்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மறுபுறம் சந்தைமயமாக்க வழிமுறைகளையும் சீன அரசு மேற்கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக அந்நிய செலாவணி மாற்று முறைமையில் மேலும் வளைந்து கொடுக்கும் சில மாற்றங்களைச் செய்தது. இந்த நடவடிக்கைகள் சில பயன் தந்துள்ளன. சீனப் பொருளாதாரம் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டில் வளர்ச்சியடந்திருப்பது உண்மை. ஆனால் சீனச் சந்தைக் கட்டுப்பாட்டு முறைமை முழுமையாக வளர்ச்சியடைய வில்லை. பொருளாதாரத்தின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதில் சக்தி குறைவு, இந்த நிலைமையில் நிர்வாக வழிமுறைகளால் சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

1  2  3