செய்தியாளர்...தொழில் நிறுவனத்தை நடத்துவதற்கென குறைந்தபட்ச உற்பத்தி நிதி இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு சாதாரண நுகர்வோரைப் பொறுத்தவரை ஒரு நல்ல விஷயமாகும். ஏன்னென்றால் அவர்களுக்கு இது ஒரு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும். நிதி இல்லாமல் தொழில் தொடங்கினால் குழப்பம் ஏற்படும் அல்லவா?
கிரேன்...தொழில் நிறுவனத்தை நடத்தினால் உங்களுக்கு நிதி இருக்க வேண்டும். அரசு இதில் தலையிடத் தேவையில்லை. தொழில் முனைவோரின் அடையாளத்தையும் அவற்றின் சமூக பாதுகாப்பு எண்ணையும் வரி வசூலிப்பு எண்ணையும் சரிப்பார்ப்பது மட்டும் அரசு வாரியங்கள் செய்ய வேண்டிய வேலையாகும். தொழில் முனைவோர் தொழில் நடத்தினால் அவர்களுக்கு நிதி இருக்க வேண்டும். இல்லை என்றால் மற்றவர்கள் அவர்களின் மீது நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். பணத்தை அவருக்கு கடனாக வழங்க மாட்டார்கள். இந்த விஷயம் தொழில் முனைவோர் சம்பந்தப்பட்டது. அரசுடன் தொடர்பு இல்லை. அரசைப் பொறுத்தவரை குறைந்தபட்ச நிதித் தேவை என்று கட்டுப்பாடு விதிப்பது தேவையில்லை. 1 2 3
|