• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-27 22:11:26    
சிங்காய் ஏரியில் பறவைத் தீவு

cri

சிங்காய் ஏரியானது, சீனாவின் மிகப் பெரிய உப்பு நீர் ஏரியாகும். மேற்கு சீனாவின் சிங்காய் மாநிலத்தில் அது அமைந்துள்ளது. அதன் வட மேற்கு முனையில் வேறுபட்ட வடிவங்களிலான இரண்டு தீவுகள் அமைந்துள்ளன. தொலைவிலிருந்து அவற்றைப் பார்க்கும் போது, அவை, தலை நிமிர்ந்த வண்ணம் பார்க்கும் இரட்டைச் சகோதரிகள் போல அவை காணப்படுகின்றன. சிங்காய் ஏரியைப் பார்வையிடும் பொருட்டு, ஆண்டுதோறும் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் வருகை தருகின்றனர். இவ்வேரியின் எழில் மிக்க இயற்கை காட்சியும் ஏரியிலான புகழ்பெற்ற இரண்டு பறவைத் தீவுகளும் இதற்குக் காரணமாகும். மக்களிடையில் சிங்காய் ஏரி பற்றி ஒரு கதை பரவிவருகின்றது. சுமார் 1300 ஆண்டுகளுக்கு முந்திய தாங் வமிச காலத்தில், இளவரசி ஒருத்தி, திருமணம் செய்து கொள்வதற்காக, சீனாவின் மத்திய பகுதியிலிருந்து திபெத்துக்குச் சென்றார். குடும்பத்தினரை நினைத்தால் ஏற்படும் துன்பத்தைத் தவிர்க்கும் பொருட்டு, முகம் பார்க்கும் கண்ணாடியை ஆகாயத்தை நோக்கி வீசியெறிந்தார். இக்கண்ணாடி தரையில் விழுந்து அழகான சிங்காய் ஏரியாக மாறியதாம். இதனால், திபெத் இன மக்கள், சிங்காய் ஏரியைப் புனித ஏரியாகக் கருதுகின்றனர். அவர்கள், சில ஆண்டுகளுக்கு ஒரு முறை, இந்த ஏரியின் கரையில், மாபெரும் வழிபாட்டு நடவடிக்கையை மேற்கொள்வது வழக்கம்.

சிங்காய் ஏரியின் கரையிலிருந்து பார்த்தால், பசுமையான மலைத்தொடர், தெளிந்த நீர், உறைபனி, மலையின் நிழல் ஆகியவை தென்படுகின்றன. ஏரியின் சுற்றுப்புறத்தில் நீரும் புல்லும் நிறைந்து, இயற்கையான மேய்ச்சல் தளமாகின்றது. கோடைக்காலத்தில் வெளியில், பொன்னிற எண்ணெய் வித்துச்செடி மலர் நறு மணம் வீசுகின்றது. ஏரியின் கரையில் ஆயர்களின் கூடாரங்கள் உள்ளன. சூரியன் உதிக்கும் போதும், மறையும் போதும் ஏரிக்கரையின் காட்சி மேலும் அழகானது. இந்த எழில் மிக்க சிங்காய் ஏரியில் தான் பறவைத் தீவு அமைந்துள்ளது.

1  2  3