• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-27 22:11:26    
சிங்காய் ஏரியில் பறவைத் தீவு

cri

பறவைகளின் இனப்பெருக்கத்திற்குத் தகுந்த இடமாக இத்தீவு விளங்குவதற்குத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த புவி நிலைமையும் இயற்கைச் சூழலும் முக்கிய காரணமாகும். மிதமான காலநிலை, அமைதியான சூழ்நிலை தழுவிய இவ்விடத்தில் மிகுந்த நீர், புல், அதிகமான மீன்கள் ஆகியவை உள்ளன. பறவைகள், அவற்றின் பழக்க வழக்கங்கள், விருப்பம் ஆகியவற்றுக்கேற்ப, வேறுபட்ட புவி நிலையையும் உயிரின வாழ்க்கைச் சூழ்நிலையும் தேர்ந்தெடுத்துக் கூடுகளை அமைக்கின்றன. 1960ஆம் ஆண்டுகளுக்குப் பின், உலகளாவிய காலநிலை மாற்றத்தின் காரணமாக, சிங்காய் ஏரியிலுள்ள நீர் மட்டம், ஆண்டுக்கு 10 முதல் 20 சென்டி மீட்டர் என்ற வேகத்தில் குறையலாயிற்று. இது, பறவைகளின் வாழ்வுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைகின்றது. இதற்காக, இவ்வேரியில் பாதுகாப்பு நிலையம் நிறுவப்பட்டுள்ளது. இவ்விடம் இயற்கைப் புகலிடமென நிர்ணயிக்கப்படவுள்ளது. இந்நிலையத்தில் 14 ஆண்டுகளாகப் பணிபுரிந்துவரும் நிலையத் தலைவர் சியெலியெமின் கூறுகின்றார், சிங்காய் ஏரியைச் சூழ்ந்து 4 பாதுகாப்பு நிலையங்களை நிறுவியிருக்கின்றோம். பறவையின் பரவல் நிலைமையைப் பரிசோதிக்கும் வகையில் தற்போது, அரை திங்களுக்கு ஒரு முறை இவ்வேரியைச் சுற்றிவருகின்றோம் என்றார் அவர்.

இத்தீவானது, பறவைகளின் இன்பகரமான தாயகமாகும். சிங்காய்-திபெத் பீடபூமியிலுள்ள முக்கிய காட்சித் தலமும் ஆகும். கடந்த பல ஆண்டுகளில் அதிகமான பயணிகள் இங்கு வருகை தந்தனர். பயணிகள், பறவைகளின் பண்டைக் கால வாழ்க்கை நிலைமையை நேரடியாகக் காணலாம். அத்துடன், மனிதரும் பறவைகளும் இணக்கமாக இருப்பதென்ற காட்சியையும் கண்டுகளிக்கலாம்.

1  2  3