• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-31 22:21:11    
சிங்கியாங்கின் உயிர் துடிப்பான பொருளாதாரம்

cri

சிங்கியாங் விகுர் தன்னாட்சிப் பிரதேசம், சீனாவின் வட மேற்கு எல்லையில் அமைந்துள்ளது. பாலைவனங்கள் கொண்ட இப்பிரதேசத்தில் இயற்கை நிலைமை மோசமாகி வருகின்றது. இதனால், நீண்டகாலமாக உள்ளூரின் பொருளாதாரம் வளர்ச்சியடையாத நிலையில் இருந்து வருகின்றது. கடந்த சில ஆண்டுகளில், சீனாவில் நடைமுறைக்கு வரும் மேற்குப் பகுதிக்கான பெரும் வளர்ச்சி நெடுநோக்கு திட்டத்தின் வாய்ப்பை சிங்கியாங் பயன்படுத்தி, தன்னாட்சி பிரதேசத்தில் செழிப்பான இயற்கை வள மேம்பாட்டையும் தனிச்சிறப்பு வாய்ந்த புவியியல் அமைப்பு மேம்பாட்டையும் முழுமையாகப் பயன்படுத்தி, பொருளாதாரத்தையும் அண்டை நாடுகளுடனான வணிக வர்த்தக நடவடிக்கையையும் பெரிதும் வளர்ச்சியுறச்செய்கின்றது. இதன் விளைவாக, தன்னாட்சி பிரதேசம் முழுவதிலுள்ள பொருளாதாரம் விரைவாக வளர்ச்சியடைந்துள்ளது. மக்களின் வாழ்க்கை நாளுக்கு நாள் செல்வமடைந்துள்ளது.

சிங்கியாங்கில் பல்வகை இயற்கை வளங்களின் படிவு அதிகம். இவற்றில், எண்ணெய், இயற்கை வாயு, நிலக்கரி, தங்கச்சுரங்கம், காற்று ஆற்றல், சூரிய வெப்ப ஆற்றல் ஆகியவற்றில், சீனாவில் முதலிடம் வகிக்கின்றது. தற்போது, சிங்கியாங்கில் 85 வகை தாதுப் பொருட்கள் எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில், எண்ணெய், இயற்கை வாயு ஆகியன நாட்டில் உள்ள மொத்தப் படிவுகளில் 30 விழுக்காட்டுக்கு மேலானது. நிலக்கரி மூலவளம் சீனாவில் 40 விழுக்காடு வகிக்கின்றது.

கடந்த சில ஆண்டுகளில், இந்த வளத்தை சிங்கியாங் பயன்தரும் முறையிலும், நியாயமாகவும் பயன்படுத்தியுள்ளது. சிங்கியாங்கின் பொருளாதார வளர்ச்சியை இது பெரிதும் விரைவுபடுத்தியுள்ளது. சிங்கியாங் விகுர் தன்னாட்சி பிரதேசத்து திட்டக்கமிட்டியின் துணை தலைவர் Niu Xiao Ping அம்மையார் செய்தியாளரிடம் கூறியதாவது:

"மேற்குப் பகுதிக்கான பெரும் வளர்ச்சி நெடுநோக்கு திட்டத்தில் சிங்கியாங்கின் தகுதிநிலை மிகவும் முக்கியமானது. நிலம், மூலவளம் ஆகியவற்றின் மேம்பாடு சிங்கியாங்குக்கு உண்டு. இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் சீனாவின் மேற்குப்பகுதியில் சிங்கியாங்கின் பொருளாதாரம் விரைவாக அதிகரித்துள்ளது." என்றார் அவர்.

1  2  3