• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-31 22:21:11    
சிங்கியாங்கின் உயிர் துடிப்பான பொருளாதாரம்

cri

கடந்த நூற்றாண்டின் 90ஆம் ஆண்டுகளில், சீனாவின் முக்கிய எண்ணெய் மற்றும் எண்ணெய் வேதியியல் தொழிற்துறை தளத்தை உருவாக்குவது என்ற நெடுநோக்கு திட்டத்தை சிங்கியாங் முன்வைத்தது. தற்போது, இத்திட்டம் ஒரு பகுதி நனவாக்கப்பட்டுள்ளது. தற்போது, எண்ணெய் வேதியியல் தொழிற்துறையானது, சிங்கியாங்கின் முதலாவது பெரிய ஆதாரத்தொழில்துறையாகும். இத்தொழில் துறையின் அதிகரிப்பு தொகை, உள்ளூர் பிரதேசத்தின் தொழிற்துறை அதிகரிப்பு தொகையில் 60 விழுக்காட்டுக்கு அதிகமாகும்.

தவிர, மேற்கிலிருந்து கிழக்கிற்கு இயற்கை வாயுவை அனுப்புவது என்ற திட்டப்பணி இவ்வாண்டின் செப்டம்பர் திங்களில் நிறைவேற்றப்பட்டது. இது, இயற்கை வாயுவை வழங்கத் துவங்கியுள்ளது. 4200 கிலோமீட்டர் நீளமான இயற்கை வாயு குழாய் மூலம், சிங்கியாங்கின் இயற்கை வாயு Talimu வடிநிலத்திலிருந்து துவங்கி, மேற்கு, மத்திய மற்றும் கிழக்கு சீனாவின் 9 மாநிலங்கள், நகரங்கள், தன்னாட்சிப் பிரதேசங்களின் ஊடாக, பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ள கிழக்கு மாநகரான ஷாங்காய் மற்றும் முழு யாங் சி ஆற்றின் முகத்துவாரப் பிரதேசத்துக்கு அனுப்பப்படும். இத்திட்டப்பணியின் மூலம், ஆண்டுக்கு சிங்கியாங்கிற்கு 100 கோடி யுவான் நிதி வருமானம் கிடைக்கும். சீன எண்ணெய் மற்றும் இயற்கை வாயு முதலீட்டுப் பங்கு கூட்டு நிறுவனத்து Talimu கிளை கூட்டு நிறுவனத்தின் தலைமை மேலாளர் திரு Sun Long De செய்தியாளரிடம் கூறியதாவது:

"இயற்கை வாயு தொழிலின் வளர்ச்சியானது, உள்ளூர் பிரதேசத்துக்கு மாபெரும் பொருளாதார மற்றும் சமூக நலனை ஏற்படுத்துவது உறுதி. இங்கு சீன எண்ணெய் மற்றும் இயற்கை வாயு முதலீட்டுப் பங்கு கூட்டு நிறுவனம் செய்த மொத்த முதலீட்டில், 47 விழுக்காட்டு நிதி, உள்ளூர் பிரதேசத்து அடிப்படை வசதிக்களுக்கான கட்டுமானத்துக்குப் பயன்படுகின்றது. இது, உள்ளூர் பொருளாதாரத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்தியுள்ளது. சிங்கியாங்கின் தென் பகுதியிலுள்ள பல்வேறு தேசிய இன மக்கள் மிகவும் நேரடியாகவும் அதிகமாகவும் பயன் பெற்றுள்ளனர் என்று நான் நினைக்கிறேன். சிங்கியாங்கின் தென் பகுதியில் பலவீனமான உயிரின வாழ்க்கை சூழலைப் பேணிக்காப்பதற்கு இது முக்கிய பங்காற்றியுள்ளது." என்றார் அவர்.

1  2  3