• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-31 22:21:11    
சிங்கியாங்கின் உயிர் துடிப்பான பொருளாதாரம்

cri

எண்ணெய் மற்றும் வேதியியல் தொழிலை முக்கியமாகக் கொண்ட தொழிற்துறை பொருளாதாரம் உயிராற்றலுடன் வளர்ச்சியுற்று வருகின்றது. தவிர, சிங்கியாங்கின் தனிச்சிறப்பு வாய்ந்த வேளாண்மை மற்றும் கால் நடை வளர்ப்புத்துறை பொருளாதாரம் உயிராற்றல் நிரம்பியுள்ளது. சிங்கியாங்கில் காணப்படும் அதிக சூரிய ஒளி, கடும் வெப்பம், வறட்சி என்ற காலநிலை, பழவகைகள், பருத்தி, தக்காளிப்பழம், பீர் மலர் உள்ளிட்ட தாவரங்களின் வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது. தற்போது, சீனாவில் மிகப் பெரிய பருத்தி தளம், ஆசியாவில் மிகப் பெரிய தக்காளிப்பழக்குழம்பின் பதனீட்டுத் தளம் மற்றும் சீனாவில் பீர் மலர் விளையும் முக்கிய பிரதேசங்களில் ஒன்றாக சிங்கியாங் மாறியுள்ளது. சிங்கியாங்கில் விளையும் திராட்சை, பேரிகாய், ஹாமி முலாம்பழம் ஆகிய தனிச்சிறப்பு வாய்ந்த பழங்கள் சீனாவில் புகழ் பெற்றவை.

கடந்த சில ஆண்டுகளில், உள்ளூரின் மூலவள மேம்பாட்டைப் பயன்படுத்தி, பொருளாதாரத்தை சிங்கியாங் வளர்ச்சியுறச்செய்வது மட்டுமல்ல, அண்டை நாடுகளுடனான பொருளாதார வர்த்தக தொடர்பையும் மேலும் அதிகப்படுத்தியுள்ளது. சிங்கியாங், 8 நாடுகளை ஒட்டியமைந்துள்ளது. இதற்கு 5600 கிலோமீட்டர் நீளமான எல்லை கோடு உண்டு. சீனாவில் தேசிய எல்லைக் கோடு மிக நீளமான, ஒட்டியமைந்துள்ள நாடுகள் மிக அதிகமான மாநிலம் இதுவாகும். இத்தனிச்சிறப்பு வாய்ந்த புவியியல் அமைப்பு மேம்பாட்டின் காரணமாக, தற்போது, சீனாவின் மேற்குப் பகுதியில், சர்வதேச வணிக வர்த்தகத்தின் பெரிய பாதை மற்றும் மையமாக சிங்கியாங் மாறியுள்ளது.

ஆண்டுதோறும் செப்டம்பர் திங்களில், சிங்கியாங்கின் தலைநகரான உருமுச்சியில் நடைபெறும் வெளிநாட்டு பொருளாதார வர்த்தகப் பேச்சுவார்த்தையில் சிங்கியாங்கின் இத்தகுநிலையைக் காணலாம். அண்மையில் முடிவடைந்த 13வது உருமுச்சி வெளிநாட்டு பொருளாதார வர்த்தக பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட அன்னிய வணிகர்களில், 80 விழுக்காட்டுக்கு அதிகமானோர், ரஷியா, கஸாக்ஸ்தான், தாஜிக்ஸ்தான் ஆகிய மத்திய ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.


1  2  3