• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-03 09:30:05    
வெண்ணிலா தேனீர் விடுதி

cri

 

சீனாவின் ஹாங்சோ நகரில் தேனீர் விடுதிகள் அண்மை ஆண்டுகளில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளன. தேனீர் விடுதிகளில் தேனீர் அருந்தியவாறு உரையாடுவது என்பது, ஹாங்சோ மக்களின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு பகுதியாக மாறியுள்ளது.

ஹாங் சோ நகரில் சுமார் 400 தேனீர் விடுதிகள் இருக்கின்றன. உரையாடுவது, சதுரங்கம் விளையாடுவது, மெதுவாக தேனீர் அருந்தி பல்வகை சிற்றுண்டியை சுவைப்பது என்பது, அவற்றில் நடைபெறும் வழக்கமான நிகழ்ச்சிகளாகும். வெண்ணிலா எனும் தேனீர் விடுதி, 1500 சதுர மீட்டர் பரப்பளவுடையது. அதன் அமைவும் அலங்காரமும் சீனாவின் சிங் வமிச காலத்து தேனீர் விடுதிகளின் பாணியை வெளிப்படுத்துகின்றன. அதன் பொறுப்பாளர் வூ ஹௌ எமது செய்தியாளரிடம் கூறியதாவது—  

"ஹாங்சோவில் உற்பத்தியான லுங்சிங் தேயிலை தவிர, சீனாவின் பல்வேறு இடங்களிலுள்ள புகழ்பெற்ற தேயிலையால் தயாரித்த தேனீரையும் வெண்ணிலா தேனீர் விடுதி வழங்குகின்றது. ஹுவாங் ஹான் மலையில் உற்பத்தியான மௌ பெங் தேயிலை, பூச்சியானில் உற்பத்தியான ஊலுங் தேயிலை முதிலயவை, அவற்றில் அடங்கும். பரவலான இடம், நல்ல காற்றோட்டம் ஆகியவை படைத்த இந்த விடுதியில் விருந்தினர் மிகவும் ஆறுதலாக இருக்கிறார்கள்" என்றார் வூ ஹௌ.

1  2  3