• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-05 15:43:06    
புதிய நூற்றாண்டில் சிங்கியாங்கின் கல்வித் துறை

cri

வடமேற்கு சீனாவில் அமைந்துள்ள சிங்கியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் கல்வி நிலை, கடந்த பல்லாண்டுகளாக ஒப்பீட்டளவில் பின்தங்கியிருந்தது. அதிகமான தேசிய இன மக்கள், சிதறிக் கிடக்கும் குடியிருப்பு வசதி ஆகியவை, இதற்குக் காரணமாகும். சமீபத்திய சில ஆண்டுகளில், சீனாவின் தேசிய இனக்கல்வி கொள்கை இடைவிடாமல் வலுப்படுத்தப்பட்டுள்ளது. சிங்கியாங்கின் பொருளாதாரம் வளர்ந்து வருகின்றது. ஆதலால், சிங்கியாங்கின் கல்வித்துறையிலும் மாபெரும் மாற்றம் காணப்பட்டுள்ளது. நகரங்களிலோ கிராமப்புறங்கள் மற்றும் கால் நடை வளர்ப்புப் பிரதேசங்களிலோ, குழந்தைகள் அனைவரும், 9 ஆண்டுகால கட்டாய கல்வி பயில வேண்டும். விவசாயிகள்-இடையர்களின் பிள்ளைகளில் பலர், பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்புக்குப் பின் ஆராய்ச்சி படிப்பிலும் கல்வி பெற்றுள்ளனர். இது அரிதல்ல. இன்றைய நிகழ்ச்சியில் சிங்கியாங்கின் கல்வி பற்றி கூறுகின்றோம்.

சார்ஜொ வட்ட இடைநிலைப்பள்ளியில் கஜாக் இன மாணவர்கள் ஹாங் இன மொழியில் பாடம் படிக்கின்றனர். இப்பள்ளி, சிங்கியாங்கின் தலைநகரான உருமுச்சியின் புறநகரிலுள்ள கால் நடை வளர்ப்புப் பண்ணையில் அமைந்துள்ளது. முன்பு, பாழடைந்த பத்துக்கு மேலான வகுப்பறைகள் மட்டும் இருந்தன. 2004ம் ஆண்டின் செப்டம்பர் திங்களில், இப்பள்ளி, உறைவிட வசதியுடைய பள்ளியாக மாற்றப்பட்டது. படிப்பு கட்டிடம், உறைவிடம், உணவு விடுதி ஆகியவை புதிதாகக் கட்டியமைக்கப்பட்டன.

முன்பு, வேளாண் மற்றும் கால் நடை வளர்ப்புப் பிரதேசங்களில் குதிரை முதுகில் பள்ளி எனப்படும் ஒரு சிறப்பு கல்விமுறை பல்லாண்டுகளாக நிலவி வந்தது. கல்விக்கருவிகளையும் பாடநூல்களையும் கொண்டு ஆசிரியர்கள் குதிரையின் முதுகில் ஏறி, இடையர்களின் வீடுகளுக்கு முறை வைத்து சென்று பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்தனர். 1990ம் ஆண்டுகளின் நடுப்பகுதியில், நிலையான குடியேற்ற வாழ்க்கைமுறை, சிங்கியாங்கில் பெரிதும் பரவலாகியிருந்தது. நாடோடி வாழ்க்கை வாழ்ந்திருந்த இடையர்கள் அதைக் கைவிட்டு குழுமிவாழ துவங்கியுள்ளனர். இதற்குப் பின், கால் நடை வளர்ப்புப்பிரதேசக் கிராமம் படிப்படியாக உருவாகியுள்ளது. தவிரவும், கிராமத்தில் பள்ளியும் நிறுவப்பட்டது. குதிரை முதுகில் பள்ளி மலையேறி விட்டது.

1  2  3