• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-05 15:43:06    
புதிய நூற்றாண்டில் சிங்கியாங்கின் கல்வித் துறை

cri

சீனாவில் 56 தேசிய இனங்கள் உள்ளன. சிங்கியாங்கில் மட்டும் 47 இனங்கள் இருக்கின்றன. சிங்கியாங்கின் வளர்ச்சி, சிறுபான்மை தேசிய இன கல்வித்தர உயர்விலிருந்து பிரிக்கப்பட முடியாதது. 2000ம் ஆண்டு முதல், சிறுபான்மை தேசிய இன மாணவர்கள், சொந்த மொழியையும் ஹான் இன மொழியையும் கற்றுக்கொள்வதென்ற கற்பித்தல் அளவை சிங்கியாங் வலுப்படுத்தியுள்ளது. சிறுபான்மை தேசிய இன கல்வி தரத்தை உயர்த்துவதே, அதன் நோக்கமாகும். 2004ம் ஆண்டு, தலைநகரான உருமுச்சி நகரில், சிறுபான்மை தேசிய இன மாணவர்களும் ஹாங் இன மாணவர்களும் ஒரே பள்ளியில் படிப்பதென்ற கல்வி முறை முதன்முதலில் நனவாகியுள்ளது. உருமுச்சி நகராட்சிக் கல்வி பணியகத்தின் தலைவர் லீ கியேன் செங் இது பற்றி கூறியதாவது:

"தத்தமது பிள்ளைகள் தரமான கல்வி பயில வேண்டும் என்ற பல்வேறு தேசிய இன மக்களின் விருப்பத்தை நிறைவு செய்வதற்காகவே, இத்தகைய பள்ளிகள் நடத்தப்பட்டுள்ளன. இரட்டை மொழி வகுப்பு, மேன்மேலும் செல்வாக்கு பெற்று வருகின்றது. இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று கோரும் குழந்தைகள் அதிகரித்து வருகின்றனர். இப்பள்ளிகளை அதிகமாகக் கட்டியமைத்து நடத்தி, தலைசிறந்த திறமைசாலிகளைப் பயிற்றுவிக்க வேண்டும் என மக்கள் கோருகின்றனர்" என்றார் அவர்.

அடிப்படை கல்வியின் வளர்ச்சி, உயர் கல்வி நிலையக் கல்வியின் வளர்ச்சியை நேரடியாக விரைவுபடுத்தியுள்ளது. 2004ம் ஆண்டில், சிங்கியாங்கின் 3200 மாணவர்கள், முக்கிய பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ளனர்.

நவ சீனா நிறுவப்பட்ட துவக்கக் காலத்தில், சிங்கியாங்கில் மிகச்சிறிய அளவிலான உயர் கல்வி நிலையம் மட்டும் இருந்தது. அதன் மாணவர்களின் எண்ணிக்கை, 300க்கும் அதிகமானதாக இருந்தது. இன்றோ, அங்கு 26 உயர் கல்வி நிலையங்கள் இருக்கின்றன. ஒரு லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.

புதிய நூற்றாண்டில் மேற்கு சீனாவின் பெரும் வளர்ச்சிக்கான முக்கிய இடம் என்ற முறையில், சிங்கியாங், பொருளாதாரத்தைப் பெரிதும் வளர்க்க வேண்டுமாயின், பெரும் எண்ணிக்கையிலான திறமைசாலிகளை பயிற்றுவிப்பது, அவசரக்கடமையாகும். இதற்காக, 2007ம் ஆண்டிற்குள் 9 ஆண்டுக்கால கட்டாய கல்வியை முழு பிரதேசத்திலும் நடைமுறைக்கு வர சிங்கியாங் திட்டமிட்டுள்ளது. அப்போது, இளைஞர்களிடையே எழுத வாசிக்க தெரியாத நிலைமை அடிப்படையில் இல்லாமல் போகும். சிங்கியாங் உய்கூர் தன்னாட்சிப்பிரதேசத்து கல்வி பகுதியின் துணை தலைவர் லியு ஹுவா நம்பிக்கையுடன் கூறியதாவது:

"சிங்கியாங்கின் கல்வி, விரைவான வளர்ச்சிக்கால கட்டத்தில் உள்ளது. சிங்கியாங்கின் கல்வி லட்சியத்தின் வளர்ச்சி மீதும் மறுமலர்ச்சி மீதும் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளோம்" என்றார் அவர்.


1  2  3