
ஒவ்வொரு கால் நடை வளர்ப்புப்பிரதேச கிராமங்களின் இத்தகைய பள்ளிகளில் கல்வி வசதிகள் எளிதானவை. சில ஆண்டுகளுக்குள், அவ்வசதிகள் பாழடைந்து பயன்பட முடியாமல் போயின. இந்நூற்றாண்டின் துவக்கம் முதல், முழு தன்னாட்சிப் பிரதேச கால் நடை வளர்ப்புப் பிரதேசங்களின் துவக்க நிலை பள்ளிகளில் அரசின் நிதியுதவியுடன் புதிய பள்ளிகள் கட்டப்பட்டன. உருமுச்சி நகரின் புறநகரில் அமைந்துள்ள ஒரு நம்பிக்கையூட்டும் துவக்க நிலை பள்ளியின் முதல்வர் உணர்ச்சிவசப்பட்டு கூறியதாவது:

"எங்கள் முந்தைய பள்ளி மிகவும் பாழடைந்தது. இது குறித்து ஆசிரியர்கள், தலைவர்கள், குழந்தைகளின் பெற்றோர்கள் எவரும் கவலைப்பட்டனர். நகரங்களின் பள்ளிகளில் இருந்ததை விட, எங்கள் பள்ளியின் வசதிகள் தரமற்றவை. புதிய பள்ளியில் பாடம் சொல்லிக்கொடுப்பதற்கான வசதிகள் மேம்பட்டுள்ளன. இப்போது அனைவரும் அரசுக்கு நன்றியுடையவராக இருக்கின்றனர்" என்றார் அவர்.
இந்த நூற்றாண்டின் துவக்கத்தில், சிங்கியாங்கில் கல்வித்துறைக்காக அரசு கோடி யுவானை முதலீடு செய்துள்ளது. இலவச கட்டாயக்கல்வி கிராமப்புறத்து இடைநிலை மற்றும் துவக்க நிலைப் பள்ளிகளுக்கான தங்கிப்படிக்கும் வசதி கட்டுமானம் முதலிய திட்டப்பணிகள் சிங்கியாங்கில் நடைமுறைக்கு வந்திருக்கின்றன. இது வரை, தன்னாட்சிப் பிரதேசத்தின் 8700க்கு அதிகமான பல்வகையான வேவ்வேறு நிலை பள்ளிகள் இருக்கின்றன. அவற்றில் 43 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். பள்ளி வயது அடைந்த குழந்தைகளில் 90 விழுக்காட்டுக்கு மேலானோர் பள்ளி சென்றுள்ளனர்.
1 2 3
|