• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-17 21:37:46    
செக்சியாங் மாநிலத்தின் காட்சித்தலம்

cri

கிழக்கு சீனாவின் கடலோரத்தில் அமைந்துள்ள செக்கியாங் மாநிலத்தில் காட்சித்தலங்கள் அதிகம். ஹாங்சோ நகரில் சிஹு ஏரி, சிதாங் பட்டினம், ஆறுகளும் ஏரிகளும் கொண்ட பிரதேசமான சாவ்சிங் நகரம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. தவிர, ஆயிரம் தீவு ஏரி, யியெதாங் மலை, புதொ மலை உள்ளிட்ட 11 அரசு நிலை காட்சித்தலப் பிரதேசங்கள் உள்ளன. செக்கியாங் மாநிலத்தின் பரப்பளவு, ஒரு லட்சம் சதுர கிலோமீட்டர் ஆகும். சுமார் 2100 தீவுகளைக் கொண்ட இம்மாநிலம், சீனாவின் மிக அதிகமான தீவுகளைக் கொண்ட மாநிலமாகும். மக்கள் தொகை சுமார் 4 கோடியே 70 லட்சமாகும். ஹான், வெய், மென், மியோ உள்ளிட்ட தேசிய இன மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தில் 11 PREFECT நிலை நகரங்களும் 57 மாவட்டங்கள் மற்றும் மாவட்ட நிலை நகரங்களும் உள்ளன. இம்மாநிலத்தில் சுற்றுலாத் தலங்கள் அதிக அளவில் இருக்கும் அதேவேளையில், சுற்றுலாப் பொருட்களும் நிறைந்து காணப்படுகின்றன. செக்கியாங் மாநிலத்தின் சுற்றுலாப் பணியகத்தின் துணைத் தலைவர் யௌ சன் ஹொ கூறுகிறார்,

ஹாங்சோ நகரை மையமாகக் கொண்ட 4 பெரிய சுற்றுலாத் தலங்கள் நிறுவப்பட்டுள்ளன. அதாவது, ஹாங்சோ நகரம் சேஸியாங் மாநிலத்தின் மையமாகவும் நிங்போ, வென்சொ, ஜிங்ஹுவா ஆகிய நகரங்கள், செக்கியாங் மாநிலத்தின் துணை மையமாகவும் கொண்ட காட்சித் தலங்கள் உருவாயிற்று. காட்சித் தலங்கள் அதிகமானவை என்பது அதன் தனிச்சிறப்பியல்பாகும். எடுத்துக்காட்டாக, சிஹு ஏரி, புதொ மலை, ஊச்சன் நகரம் முதலியவை, வெளிநாட்டுச் சந்தையில் ஈர்ப்புத் தன்மை மிக்கவை. எழில் மிக்க இயற்கைக் காட்சித் தலங்களைக் கொண்ட சேஸியாங் மாநிலம், மனித சமூகப் பண்பாட்டு மணம் கமழும் மாநிலமாகும். எடுத்துக்காட்டாக, சாவ்சிங் நகரில், அனைத்து காட்சித் தலங்களுக்கும் வரலாறும் பண்பாடும் உண்டு என்றார் அவர்.

1  2  3