அவை ஒவ்வொன்றுக்கும் எழில் மிக்க காட்சியும் இனிய கதையும் உண்டு. சிஹு ஏரியிலுள்ள பளிங்கு நீரினால், புராதன நகரான ஹாங்சொ அழகு மிகுந்து காணப்படுகின்றது. முத்து போன்ற சிஹு ஏரி, ஹாங்சொ மக்களின் வாழ்க்கையை அழகுபடுத்தியுள்ளது. அதிகமான பயணிகளை ஈர்க்கும் ஹாங்சொ நகரிலுள்ள உணவு வகையும் அறியத் தக்கது. ஹாங்சொ கறிகள் சேஸியாங் காய்யின் பிரதிநிதிகளாகும். அவை புகழ்பெற்றவை. அவற்றின் சமையல் தொழில் நுட்பத்தில் பொரித்தல், வறுத்தல், வேகவைத்தல் ஆகியவை பாராட்டத் தக்கவை. சிஹு ஏரி மீன், பிச்சைக்காரன் கோழி, லுங்ச்சின் இறால் முதலியவை குறிப்பிடத் தக்கவை. அங்குள்ள பல பிரபல உணவகங்கள் சுமார் 100 ஆண்டு வரலாறுடையவை.
எடுத்துக்காட்டாக, சிஹு ஏரி அருகில் அமைந்துள்ள சூவெய்குவான் உணவகம் நூறு ஆண்டு வரலாறுடைய உணவகமாகும். இவ்வுணவகத்தின் தலைமை சமையற்காரர் லியூ கொமின் கூறுகிறார்,

எங்களுடைய சிஹு ஏரி மீன் வளர்ப்புக்கென சிறப்புக் குளம் உண்டு. குளத்திலுள்ள நீர், சிஹு ஏரியிலிருந்து கொண்டுவரப்பட்டது. குளத்தில், மீன்களைச் சுமார் ஒரு வாரம் வளர்த்து, சிஹு ஏரி நீரை அவை முழுமையாக அருந்திய பின், சமைக்கப்பட்ட மீனை, உண்மையான சிஹு ஏரி மீன் என்று கூறலாம் என்றார் அவர். மூலப் பொருட்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துவது, தனிச்சிறப்பு வாய்ந்த சமையல் தொழில் நுட்பம் முதலியவை சேஸியாங் கறியின் பொது சிறப்பு ஆகும். வெளிநாட்டுப் பயணிகளின் விருப்பத்துக்கிணங்க, சில பாரம்பரிய கறிகளின் சமையல் வழிமுறையை மாற்றியுள்ளதாக அவர் கூறினார். சவெய்குவான் உணவகத்தின் சிற்றுண்டியும் புகழ் பெற்றது. அதன் கோதுமை உணவு வகை சுட்டத்தக்கது என்றார் அவர். 1 2 3
|