
கடந்த சுமார் 10 ஆண்டுகளாக, சேஸியாங் மாநிலத்தின் சுற்றுலா துறை விரைவாக வளர்ச்சியடைந்துவருகின்றது. அதன் மூலம், ஆண்டுதோறும், 8000 கோடி யுவான் வருமானம் கிடைக்கிறது. இது, மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 9 விழுக்காடு வகிக்கின்றது. 2003ஆம் ஆண்டு சுமார் 18 லட்சம் வெளிநாட்டுப் பயணிகள் அங்கு சுற்றுலா மேற்கொண்டனர். உள் நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 8 கோடியே 40 லட்சத்தை எட்டியுள்ளது. சேஸியாங் மாநிலத்தின் காட்சித் தலம் பற்றி குறிப்பிடும் போது, அதன் தலைநகரான ஹாங்சொ நகரிலுள்ள சிஹு காட்சித் தலம் பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது. இவ்விடத்தில் பல்லாண்டுகளாக வசித்துவரும் மக்களைப் பொறுத்தவரையிலும் சரி, உலா மேற்கொள்ளும் பயணிகளைப் பொறுத்தவரையிலும் சரி, உலகில் ஈடிணையற்ற எழில் மிக்க காட்சியினால் அவர்கள் ஈர்க்கப்படுகின்றனர்.

வசந்த கால மார்ச் திங்களில் பறவைகள் பாடுகின்றன. மலர்கள் மலர்கின்றன. கோடை காலத்தில் தாமரை, இலையுதிர் காலத்தில் சிஹு ஏரியில் நிலா நிழல், குளிர் காலத்தில் உறைபனிக்குப் பின் செம் பிளம் ஆகியவை தனிச்சிறப்பியல்பு வாய்ந்தவை.
சிஹு ஏரியை மையமாகக் கொண்ட 60 சதுர கிலோமீட்டருடைய காட்சிப் பிரதேசத்தில், 40க்கும் அதிகமான பிரபல காட்சித் தலங்களும் 30க்கும் அதிகமான தொல்பொருள் சின்னங்களும் உள்ளன. அவற்றில், பிங்ஹூ சியூயெ, ஹுவாகாங் என்னும் இடத்தில் பொன் மீன் முதலியவை குறிப்பிடத்தக்கவை. 1 2 3
|