• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-24 11:48:35    
வட கிழக்கு சீனாவில் பனிச் சறுக்கு விளையாட்டு

cri

வட கிழக்கு சீனாவின் ஹெலுங்சியாங் மாநிலமும் ஜிலின் மாநிலமும் குளிர் காலத்தில் உறைபனி உலகமாக மாறியுள்ளன. இங்கு ஒவ்வொரு ஆண்டின் நவம்பர் முதல் அடுத்த ஆண்டின் பிப்ரவரி வரை, பனிச் சறுக்கு விளையாட்டில் ஈடுபடும் மிக சிறந்த காலமாகும்.

சீனாவில் குளிர்காலத்தில் சுற்றுலா வளம் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக ஜிலின் மாநிலம் திகழ்கின்றது. குளிர் காலத்தில் இவ்விடத்தில், பனி அதிக அளவில் பெய்வதால், பனிச் சறுக்கு விளையாட்டுப் போட்டி நடைபெறுவதற்கு ஏற்ற நிலைமை நிலவுகிறது.

தற்போது, இம்மாநிலத்தில் சர்வதேச விதிகளின் படி தயாரிக்கப்பட்ட பனிச் சறுக்கல் மைதானங்கள் பல உள்ளன. இவற்றில் முக்கியமாக, ஜிலின் மாநிலத்தின் தலைநகரான சாங்சுன் நகரிலுள்ள ஜின்யுதே பனிச் சறுக்கல் மைதானம், ஜிலின் நகரிலுள்ள பெய்தாஹு பனிச் சறுக்கல் மைதானம், சாங்பெய்சான் மலையிலுள்ள கௌசான் பனிச் சறுக்குப் பயிற்சித் தளம் ஆகியவை அடங்கும். இவற்றில் ஜின்யுதே பனிச் சறுக்கல் மைதானம் புகழ்பெற்றது. இம்மைதானத்தில் உறைபனிச் சறுக்கு, பனிச் சறுக்கு, மோட்டார் வாகனத்தில் பனிச் சறுக்குவது, பனிச்சறுக்கூர்தி உள்ளிட்ட ஏறக்குறைய அனைத்து உறைபனிச் சறுக்கு விளையாட்டு நிகழ்ச்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளன.

1  2  3