• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-24 11:48:35    
வட கிழக்கு சீனாவில் பனிச் சறுக்கு விளையாட்டு

cri

கிழக்கு சீனாவின் சான்துங் மாநிலத்தைச் சேர்ந்த வாங்ஹொங் என்பவர், ஜின்யுதே பனிச்சறுக்கல் மைதானத்துக்கு வருவது இதுவே முதல் தடவையாகும். பனிச்சறுக்கல் பாதையில் மற்றவர்கள் லேசாகச் சறுக்கி, அழகான சரிவுக்கோடுகளைப் போட்டியிருப்பதைக் கண்ட அவர் வியப்படைந்து இவர்களைப் போல சறுக்க முயன்றார். தட்டுத்தடுமாறி சறுக்கிய போதிலும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். அவர் கூறுகிறார்,

"இவ்விடம் எழில் மிக்கது. உறைபனியைக் காணவும் பனிச் சறுக்கவும் நான் சிவப்பு ஆடையொன்றை வாங்கினேன். சிவப்பு கம்பளி நூலைக் கொண்ட தொப்பியொன்றைப் பின்னினேன். நீங்கள் பாருங்கள், வெண்ணிற உறைபனியும் சிவப்பான ஆடையும் தொப்பியும் மிகவும் அழகாக இருக்கு" என்றார் அவர்.

பனிச்சறுக்கு விளையாட்டுகளைப் பிரபலப்படுத்தும் வகையில், கடந்த ஆண்டின் குளிர் காலம் முதல், ஜிலின் மாநிலத்தில் பல விளையாட்டு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இவற்றில் முக்கியமாக, சாங்சுன் உறைபனிச் சுற்றுலா நிகழ்ச்சி, ஜிலின் பெய்தாஹு சர்வதேச பனிச் சறுக்கல் நிகழ்ச்சி, சாங்பெய்சான் மலையில் சர்வதேச மலை ஏறுதல் போட்டி, சீன உறைபனி வாகனப் போட்டி ஆகியவை அதிகமான பயணிகளை ஈர்த்துள்ளன. குளிர் காலத்தில் அவர்கள் தென் சீனாவுக்குச் சென்று, மாக்கடல், தென்னை மரம் ஆகியவற்றைக் கண்டுகளிக்கும் வழக்கத்தை மாற்றி, வட கிழக்கு சீனாவுக்குச் சென்று, பனிச் சறுக்க விரும்புகின்றனர். கடந்த குளிர்காலம் முதல், ஜிலின் மாநிலத்தில் உறைபனிச் சுற்றுலா மேற்கொண்டோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளில் இதே காலத்தில் இருந்ததை விட அதிகமாக உள்ளது. இவ்வாண்டு ஜனவரி 10ந் நாள் வரை, சாங்சுன் ஜியுதே பனிச் சறுக்கல் மைதானத்துக்கு வருகை தந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இது, முன்பு காண்பது அரிது என்று ஜிலின் மாநிலத்தின் சுற்றுலா பணியகத் தலைவர் யுயெ கொச் கூறினார். அவர் மேலும் கூறியதாவது,

"இவ்வாண்டு, சான்சுன் ஜியுதே பனிச்சறுக்கல் மைதானம், ஜிலின் பெய்தாஹு பனிச்சறுக்கல் மைதானம் ஆகியவற்றில் சுற்றுலா மேற்கொண்டோரின் எண்ணிக்கை, குறிப்பாக பனிச்சறுக்கியவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டுகளில் இருந்ததை விட சில மடங்கு அதிகரித்துள்ளது. அண்மையில் ஜிலின் நகரில் 3 நட்சத்திர உணவு விடுதிகளிலும் 4 அல்லது 5 நட்சத்திர உணவு விடுதிகளிலும் காலியான அறைகள் இல்லை" என்றார் அவர்.

1  2  3