• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-24 11:48:35    
வட கிழக்கு சீனாவில் பனிச் சறுக்கு விளையாட்டு

cri

இனி, ஆசியாவில் மிகப்பெரிய பனிச் சறுக்கல் மைதானமான ஹெலுங்சியாங் யாபுலி பனிச்சறுக்கல் மைதானத்துக்குச் சென்றுபார்ப்போம். ஹெலுங்சியாங் மாநிலத்தின் வட கிழக்கில் அமைந்துள்ள இம்மைதானத்தில் பனி மிக அதிகமாக உள்ளது. பனிச் சறுக்கல் பாதையும் இடைவெளியும் பனிச் சறுக்கலுக்குத் தகுந்தது. இம்மைதானத்தில் மொத்தம் 10க்கும் அதிகமான பனிச் சறுக்கல் பாதைகள் உள்ளன. அவற்றின் முழு நீளம் 30 கிலோமீட்டராகும். இங்கு பனிச்சறுக்கல் கற்றுக்கொள்வது மிகவும் எளிது. ஆபத்து இல்லை. ஏனெனில், சீனாவின் தலை சிறந்த பனிச்சறுக்கல் ஆசிரியர்கள் உள்ளனர் என்று யாபுலி பனிச்சறுக்கல் மைதானத்தின் துணைத் தலைவர் சன்சென்குவாங் கூறினார். அவர் கூறியதாவது,

"எங்கள் ஆசிரியர்களில் பெரும்பாலோர் சீனப் பனிச்சறுக்கல் அணியிலிருந்து விலகியவர்கள். அவர்கள், முந்தைய பனிச்சறுக்கல் விளையாட்டுப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றவர்களும் இரண்டாம் பட்டம் பெற்றவர்களும் ஆவர். பனிச்சறுக்கல் விரும்புவோர் பனிச்சறுக்கல் நுட்பத்தை விரைவில் கிரகித்துக்கொள்வதற்கு அவர்கள் பேருதவியளிக்கலாம்" என்றார் அவர். பனிச்சறுக்கல் பலகையை எவ்வாறு கட்டுப்படுத்துவது, ஆபத்தான நிலைமையில் காயமுறுவதைத் தவிர்க்கும் பொருட்டு, உடம்பைச் சரித்துக் கீழே விழுவது என்பது பற்றி அவர்கள் சொல்லிக்கொடுப்பர்.

ஹெலுங்சியாங் மாநிலத்தின் தாச்சிங் எண்ணெய் வயல் நிர்வாகப் பணியகத்தின் சௌலிபிங் கூறியதாவது,

"இவ்விடம் மிகவும் நல்லது. சீனாவின் பனிச்சறுக்கல் மைதானத்தில் இது முதல் தரம். நான் இங்கு 4,5 முறை வந்திருக்கின்றேன்" என்றார் அவர்.

பனிச்சறுக்கல் தவிர, ஜிலின் மாநிலத்திலும் ஹெலுங்சியாங் மாநிலத்திலும் வேடிக்கையான பனிச்சறுக்கல் விளையாட்டு நிகழ்ச்சிகள் பல உள்ளன. எடுத்துக்காட்டாக, உறைபனிக்கென பயன்படுத்தப்படும் மோட்டார் வாகனம் மூலம், பனிக்கட்டி ஏரியின் மேலே விளையாடலாம். நாய் இழுக்கும் ஒரு வகை வாகனத்தில் ஏறி உறைபனி மைதானத்தில் செல்லலாம். இன்னும் பல உள்ளன. சுற்றுலா நிகழ்ச்சிகள் தவிர, காட்டில் நடந்துசென்று, வெண்ணிற உறைபனியைக் கண்டுகளிப்பதோடு, சரசரவென்று மரங்கள் ஒலிக்கும் சத்தத்தையும் கேட்டுமகிழலாம். மனிதரும் இயற்கையும் இசைவாக இருப்பதை உணர்வது மிகவும் சிறப்பு.


1  2  3