• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-28 18:40:31    
வட கிழக்கு சீனாவின் அரசு சாரா தொழில் நிறுவனம்

cri

திரு Jiang Tie Jun அரசு சாரா தொழில் முனைவோர் ஆவார். வட கிழக்கு சீனாவின் Liao Ning மாநிலத்தில் பசைப்பொருள் கூட்டு நிறுவனத்தை அவர் நடத்தினார். 10 ஆண்டுக்கால நிர்வாகம் மூலம், அவரின் கூட்டு நிறுவனத்தில் தயாராகும் Geliahao என்ற பசைப்பொருள், சீனாவின் பசைப் பொருள் சந்தையில் புகழ் பெற்றது. வட கிழக்கு பிரதேசத்தை வளர்ச்சியுறச்செய்வது பற்றிய அரசின் கொள்கை, இப்பிரதேசத்து அரசு சாரா தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு, புதிய வாய்ப்பையும் ஆற்றலையும் வழங்கியுள்ளது என்று திரு Jiang கருதுகின்றார். தொழில் நிறுவனத்தின் வளர்ச்சி மூலம், உள்ளூர் பொருளாதாரத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கு பங்காற்ற வேண்டுமென்று அவர் விரும்புகின்றார். அவர் கூறியதாவது:

 

"Geliahao கூட்டு நிறுவனமானது, ஒரு அரசு சாரா தொழில் நிறுவனமாகும். வட கிழக்கு சீனாவின் பொருளாதாரத்தை வளர்ச்சியுறச்செய்வதென்ற பெரிய சூழலில், வட கிழக்கு பிரதேசத்தின் ஒவ்வொருவர் போல், இக்கூட்டு நிறுவனம் நன்மையை பெற்றுள்ளது. இச்சூழலானது, இக்கூட்டு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு சிறந்த அடிப்படையிட்டுள்ளது. இத்தொழில் நிறுவனத்தை மேலும் செவ்வனே நடத்தி, வட கிழக்கு சீனாவை வளர்ச்சியுறச்செயவதற்குப் பங்காற்ற வேண்டுமென்று நாங்கள் விரும்புகின்றோம்." என்றார் அவர்.

திரு Jiang குறிப்பிட்ட வட கிழக்கு பிரதேசத்தை வளர்ச்சியுறச்செய்வது பற்றிய கொள்கையானது, 2003ஆம் ஆண்டு அக்டோபர் சீனா முன்வைத்த ஒரு முக்கிய நெடுநோக்கு கொள்கை தீர்மானமாகும். சீனாவின் வட கிழக்கு பிரதேசத்தின் பழைய தொழிற்துறை தளத்தைச் சரிப்படுத்தி, மாற்றியமைப்பதன் மூலம், வட கிழக்கு பிரதேச மற்றும் இதர பிரதேசங்களின் பொருளாதாரத்தின் ஒருங்கிணைப்பான வளர்ச்சியை முன்னேற்றுவிக்க வேண்டும். 2003ஆம் ஆண்டில், வட கிழக்கு பிரதேசத்து அரசு சார் தொழில் நிறுவனத்தின் வளர்ச்சியை இக்கொள்கை பயன்தரும் முறையில் முன்னேற்றுவித்துள்ளது. இது மட்டுமல்ல, இங்குள்ள மிக பல அரசு சாரா தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் மேலதிக வாய்ப்பை வழங்கியுள்ளது.

1  2  3