• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-28 18:40:31    
வட கிழக்கு சீனாவின் அரசு சாரா தொழில் நிறுவனம்

cri

அரசு சார் தொழில் நிறுவனங்கள் செறிந்திருக்கும் Liao Ning மாநிலத்தை எடுத்துக்காட்டாகப்பார்ப்போம். கடந்த சில ஆண்டுகளில், இம்மாநிலத்தின் அரசு சாரா தொழில் நிறுவனங்கள் விரைவாக வளர்ச்சியுற்று வருகின்றன. கடந்த ஆண்டின் முதல் 8 திங்களில், இம்மாநில அரசு சாரா பொருளாதாரத்தின் அதிகரிப்பு விகிதம், முழு மாநிலத்தின் சராசரி பொருளாதார அதிகரிப்பு விகிதத்தை விட 10 விழுக்காடு அதிகமாகும். இம்மாநிலத்தில் 15 லட்சத்துக்கு அதிகமான அரசு சாரா தொழில் நிறுவனங்கள் உள்ளன. உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கான ஆதார தூணாக அவை மாறியுள்ளன. Liao Ning மாநிலத்தின் அரசு சாரா தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி தனிச்சிறப்பியற்பு பற்றி இம்மாநிலத்தின் துணை தலைவர் Liu Guo Qiang கூறியதாவது:

"அரசு சாரா தொழில் நிறுவனமானது, வேலை வாய்ப்பை அதிகரிப்பதற்கான முக்கிய வழிகளில் ஒன்றாகும். அரசு சார் தொழில் நிறுவனங்களின் புனரமைப்பில் பங்கெடுப்பதன் மூலம், அரசின் கையிருப்புக்கு உயிரூட்டுவதிலும், அரசு சார் தொழில் நிறுவனங்களின் அமைப்பு முறையை மாற்றுவதிலும் அரசு சாரா தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன. அவை, இம்மாநிலத்தின் தொழில் நுட்ப புதுமையின் முக்கிய புதிய ஆற்றலாகும். அரசு சாரா பொருளாதாரமானது, இம்மாநிலத்து பொருளாதார தொழில் அமைப்பு முறையை மேம்படுத்துவதற்கான முக்கிய ஆற்றலாகும்" என்றார் அவர்.

முன்பு, சீனாவின் வட கிழக்கு பிரதேசத்திலான அரசு சாரா தொழில் நிறுவனங்களில் பெரும்பாலானவை உள்ளூர் பிரதேசத்தில் வளர்ச்சியுற்று வந்தன. அவை, அரசு சார் தொழில் நிறுவனங்களுக்கான முக்கிய குறை நிரப்பாகும். இத்தொழில் நிறுவனங்களில் தயாராகும் பொருட்களில், தொழில்துறை மூலப்பொருட்கள், மற்றும் அரை உற்பத்திப்பொருட்கள், சிறிய ரக இயந்திர சாதன மற்றும் மின்சார உற்பத்திப்பொருட்கள் உள்ளிட்ட உயரிய அறிவியல் தொழில் நுட்ப அளவுடைய உற்பத்தி பொருட்கள் அதிகம். வட கிழக்கு பிரதேசத்தை வளர்ச்சியுறச்செய்வது பற்றிய கொள்கையை சீன அரசு முன்வைத்த பின், இந்நிலைமை ஓரளவு மாற்றமடைந்துள்ளது. தென் சீனாவின் அரசு சாரா தொழில் நிறுவனங்களும், அன்னிய வணிகர்களும் இங்கு அரசு சாரா பொருளாதாரத்தை வளர்ச்சியுறச்செய்வதற்கான எதிர்காலம் மீது பேரார்வம் காட்டி, இங்கு வந்து ஒத்துழைப்பு மேற்கொள்வதற்கான வாய்ப்பை நாடுகின்றனர். திரு Jiang Tie Junனின் பசைப்பொருள் கூட்டு நிறுவனம் அன்னிய வணிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

1  2  3