• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-28 18:40:31    
வட கிழக்கு சீனாவின் அரசு சாரா தொழில் நிறுவனம்

cri

               

"வட கிழக்கு பிரதேசத்தை வளர்ச்சியுறச்செய்வதற்கான கொள்கை முன்வைக்கப்பட்ட பின், எங்கள் தொழில் நிறுவனம் மீது அன்னிய வணிகர்கள் கவனம் செலுத்துகின்றனர். ஜெர்மன் Henkel கூட்டு நிறுவனம், ஆஸ்திரேலிய Saili கூட்டு நிறுவனம், சீன தைவானின் Kawing கூட்டு நிறுவனம் ஆகியவை எங்கள் கூட்டு நிறுவனத்துடன் ஒத்துழைப்பு மேற்கொள்ள எங்களுடன் வர்த்தக நோக்கத்துக்கான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இது, எங்கள் கூட்டு நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு சிறந்த அடிப்படையை உருவாக்கியுள்ளது" என்றார் அவர்.

தொழில் நிறுவனங்கள் மேலும் உயிராற்றலுடன் வளர்ச்சியுறத் துணைப்புரியும் பொருட்டு, தொழில் நிறுவனங்களின் அறிவியல் தொழில் நுட்ப புதுமையை வலுப்படுத்த வேண்டும் என்று வட கிழக்கு பிரதேசத்து அரசும், அரசு சாரா தொழில் நிறவனங்களும் அறிந்து கொண்டுள்ளன. இதனால், அரசு சாரா தொழில் நிறுவனங்களின் அறிவியல் தொழில் நுட்ப அளவை உயர்த்தி, உயர் நிலை கல்வி, புதிய உயரிய தொழில் நுட்பம் உள்ளிட்ட தொழிற்துறைகள் ஆகியவற்றில் அவை வளர்ச்சியடைவதற்கு உதவுவது என்பது இப்பிரதேசத்து அரசு அதிகாரிகளும் அரசு சாரா தொழில் முனைவோரும் கொண்ட ஒத்த கருத்தாகும்.

வட கிழக்கு பிரதேசத்தில், Liao Ning மாநிலத்தைத் தவிர, Ji Lin, Hei Long Jiang ஆகிய மாநிலங்களின் அரசு சாரா தொழில் நிறுவனங்கள் பெரும் வளர்ச்சி பெற்றுள்ளன.


1  2  3