• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-04 17:19:04    
மங்கோலிய இனம் பற்றி

cri

மங்கோலிய இனம், சீனாவின் 55 சிறுபான்மை தேசிய இனங்களில் ஒன்றாகும். இவ்வினத்தின் பெரும்பாலானோர் வட சீனாவின் உளமங்கோலிய புல்வெளியில் வாழ்கின்றனர். விசாலமான புல்வெளி, விரைந்து ஓடும் குதிரைகள் வெள்ளையான மங்கோலிய கூடாரம் ஆகியவை, மங்கோலிய இன மக்கள் வாழ்க்கையில் அதிகமாக காணப்படும் காட்சிகளாகும். இருப்பினும், தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாநிலத்தில் குழுமிவாழும் ஒரு பகுதி மங்கோலிய இனத்தவரின் உற்பத்தி மற்றும் வாழ்க்கை முறை, வடக்கிலுள்ள மங்கோலிய இனத்தவரின் முறையிலிருந்து பெரிதும் வேறுபட்டுள்ளன. அவர்கள் மீன்பிடிப்பர். சாகுபடி செய்வர். சிலர், கட்டிடத்துறையில் ஈடுபடுவதன் மூலம் வாழ்கின்றனர்.

சீனாவின் யுன்னான் மாநிலத்தின் நடுப்பகுதியில் ஏரிகள் உள்ளன. அங்கு வசிக்கும் மங்கோலிய இனத்தின் மக்கள் தொகை, பத்தாயிரத்துக்கும் அதிகமாகும். 13வது நூற்றாண்டில் சீனாவின் யுன் வம்ச காலத்தைச் சேர்ந்த மங்கோலிய இன அதிகாரிகள் மற்றும் படைவீரர்களின் தலைமுறையினராவர் இவர்கள். 700 ஆண்டுகளுக்கு முன்னரே, இந்த இனத்தவர் இந்த ஏரியோரத்தில் வாழத் துவங்கினர்.

700 ஆண்டுகள் உருண்டோடின. உள்ளூர் வாழ்க்கைக்கு ஏற்ப, புல்வெளியிலிருந்து வந்த மங்கோலிய மக்கள், ஆடு, மாடு மேய்க்கும் தொழிலை விட்டு மீனவராக மாறினர். பின்னர், விவசாயிகளாகவும் கட்டிடத் தொழிலாளர்களாகவும் மாறினர். யுன்னானிலுள்ள மங்கோலிய இன மக்கள், உள்ளூர் சூழலுக்கிணங்க தமது வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்வதற்கு நல்ல எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றனர் என்று கூறலாம்.

1  2  3  4