• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-04 17:19:04    
மங்கோலிய இனம் பற்றி

cri

யுன்னான் மங்கோலிய இனத்தின் தேசிய இன விழாக்களும் தனித்துவம் மிகுந்தவை. இவை, அவர்களின் வாழ்க்கை அனுபவத்துடன் தொடர்புடையவை. முன்பு, ஆற்றோரத்தில் வாழ்ந்து மீன்பிடித்து விற்று வாழ்ந்தனர். பின்னர், ஹாங் இன சகோதரர்களிடமிருந்து, வீடு கட்டும் நுட்பத்தைக் கற்றுக்கொண்டு வீடு கட்டினர். தவிரவும், இந்நுட்பத்தை பெரிதும் வளர்த்தனர். சீனக்கட்டிடக் கலைத்தொழிலைத் துவக்கியவர், கட்டுக்கதையிலுள்ள Lu Ban என்பவராவார். எனவே, Lu Ban யுன்னான் மங்கோலிய இன மக்களின் மதிப்பும் அன்பும் பெற்றுள்ள பிரமுகராகினார். ஆண்டுதோறும், "Lu Ban" விழா அங்கு கொண்டாடப்படும். விழா அன்று, பரபரப்பு காணப்படும். வெளியூரில் கட்டிடத்தொழிலில் ஈடுபடுவோர் அனைவரும் ஊர் திரும்புவர். கிராமவாசிகள் விருந்து நடத்துவர். Lu Ban சிலையை தூக்கிய வண்ணம், ஆடிப்பாடி, பல்வேறு கிராமங்களில் வலம் வந்து, வெவ்வேறான கொண்டாட்டங்களை மேற்கொள்வர். பாம்பு நடனம், வண்ண பொருட்களால் அலங்கரிக்கப்படும் கப்பல்களை ஓட்டுவது முதலியவை இவற்றில் அடங்கும்.

           

தம் முன்னோடிகளின் கட்டிடக்கலையைச் சார்ந்திருந்து, யுன்னான் மங்கோலிய இன மக்கள், கம்பீரமான கட்டிடங்கள் பலவற்றைக் கட்டியுள்ளனர். இவை, பல தலைமுறையினரின் பாராட்டைப் பெற்றிருக்கின்றன. மங்கோலிய கட்டிட கலைஞர்கள் கட்டியுள்ள "Xiu Shan Gu Bai" எனும் அடுக்கு மாடிக் கட்டிடம், Ju Kui Ge எனும் மாளிகை முதலிய கட்டிடங்கள், சீன கட்டிடக் கலையில் தலைசிறந்தவை எனப் பாராட்டப்படுகின்றன. குறிப்பாக, Xiu Shan Gu Bai அடுக்கு மாடிக் கட்டிடம், சீனாவின் பண்டைக்கால கட்டிடக் கலையிலுள்ள அற்புதமாகும். Tong Hai மாவட்ட பண்பாட்டு அகத்தின் தலைவர் Li Shu Shan இது குறித்து உணர்ச்சிவசப்பட்டு கூறியதாவது:

"Xiu Shan Gu Bai அடுக்கு மாடிக்கட்டிடம் போன்ற கட்டிடம், சீனாவில் தற்போது இல்லவே இல்லை. தொல்பொருள் பாதுகாப்பில் தேசிய மரவுச்செல்வப் பிரிவில் அதனை சேர்க்குமாறு நாங்கள் விண்ணப்பிக்கவுள்ளோம்" என்றார், அவர்.

1  2  3  4