• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-04 17:19:04    
மங்கோலிய இனம் பற்றி

cri

Tong Hai எனும் இடத்தில், ஹான், Hui, யி, தை முதலிய பல தேசிய இனங்கள் வாழ்கின்றன. பல்வேறு இன மக்களுடன் நீண்டகாலம் வாழ்ந்து தொடர்பு கெள்வதில், யுன்னான் மங்கோலிய இனத்தவர், மங்கோலிய இனத்தின் முந்தைய வாழ்க்கை மற்றும் உற்பத்தி பழக்க வழக்கங்களை மாற்றி, வெவ்வேறான தேசிய இனங்களின் பண்பாடுகளைச் சேர்த்துள்ளனர். இதனால், இதற்கு, தனிச்சிறப்பியல்புடைய தேசிய இனப் பண்பாட்டு தொகுதி உருவாயிற்று.

எடுத்துக்காட்டாக, புல்வெளியில் வாழும் மங்கோலிய இனத்தவர் திபெத் மரபுவழி புத்த மதத்தின் மீது நம்பிக்கை கொள்கின்றனர். ஆனால், யுன்னானிலுள்ள மங்கோலிய இனத்தவர், பல கடவுள்கள் மீது நம்பிக்கை உடையவர்கள். வேறுபட்ட மதப் பண்பாடுகள், இங்கு சங்கமித்துள்ளன.

புல்வெளியிலிருந்து தொலைத்தூரத்தில் இருந்த போதிலும், ஆடல்பாடல் வல்லுநர் என்ற இயல்பை மங்கோலிய இனத்தவர் விட்டுவிடவில்லை. வித்தியாசம் என்ன என்றால், அவர்களின் ஆடல்பாடல், பார்ப்பதற்கு உள்ளூர் யி இனத்தின் ஆடல் போலிருக்கின்றது. "Tiao Yue" என்பது, யுன்னான் மங்கோலிய இனத்து இளைஞர்கள் விரும்பும் ஆடலாகும். நடனமாகும் போது, அனைவரும் வட்டமாக இருந்து, பக்க வாத்திசையுடன் ஆடிப்பாடி மகிழ்வர்.

1  2  3  4