• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-10 00:04:31    
வெய்ஹைய்  நகரம்

cri

வெய்ஹைய் நகரம், கிழக்கு சீனாவின் சாங்துங் மாநிலத்தைச் சேர்ந்த கடலோர நகரமாகும். அது, சியொதுங் தீபகற்பத்தின் கிழக்கு முனையில் அமைந்துள்ளது. வெய்ஹைய் நகரை, 3 பக்கமும் கடல் சூழ்ந்துள்ளது. கடல் கரையின் நீளம் சுமார் ஆயிரம் கிலோமீட்டர். இது, சீனப் பெரு நிலப்பகுதியிலுள்ள கடற்கரையின் மொத்த நீளத்தில் சுமார் 5.6 விழுக்காடாகும். கடலோரத்தில் உள்ள வெய்ஹைய் நகரத்தில் காற்று தூய்மையானது. சுற்றுச்சூழல் அழகானது. நகரப்பகுதியில் 80 விழுக்காட்டுக்கு மேலான இடங்களில் மரங்களும் செடிகொடிகளும் மலர்களும் வளர்கின்றன. கோடை காலத்தில் கடும் வெப்பமில்லை. குளிர்காலத்தில் கடும் குளிர் கிடையாது. இதன் விளைவாக, ஆண்டுதோறும் அதிகமான பயணிகள் வெய்ஹை நகருக்கு வருகை தருகின்றனர். 2003ல், ஐ.நா. மனிதக் குடியிருப்புப் பரிசு இந்நகருக்கு வழங்கப்பட்டது.

கடல் கரையில் அமைந்துள்ள வெய்ஹைய் நகரம் மிகவும் அழகாகக் காணப்படுகின்றது. கட்டடங்கள், மரங்களுக்கிடையில் கட்டியமைக்கப்பட்டவை. நகரப் பகுதியில் நடந்துசெல்லும் போது, தலை நிமிர்ந்துபார்த்தால், கடல் காட்சி கண்களுக்கு முன் விரிகிறது. பறவைகள் கடலின் மேல் பறக்கின்றன. கடல் அலைகள் கடற்கரையுடன் மோதுகின்றன. கடலிலிருந்து தூய்மையான காற்று வீசுகின்றது. வெய்ஹைய் நகரம், கடலுக்கு அருகில் அமைந்த போதிலும், கடற்கரை சுத்தமாக உள்ளது. கடல் நீர் பளிங்கு போன்றது. கடலோரத்தில் கட்டியமைக்கப்பட்ட ஹைய்பிங் பூங்காவில் தேவதாரு மரம்,chinse parasol மரம், chinse scholartree ஆகியவை வரிசை வரிசையாக வளர்ந்துள்ளன. பச்சை நிறப் புல் தரை கடற்கரை வரை நீட்டியுள்ளது. இந்நகருக்கு வருகை தரும் பயணிகளனைவரும், இந்நகரின் அழகினால் உணர்ச்சிவசப்படுவர். இந்நகரில் நீண்ட காலமாக வாழ்ந்துவரும் யியு யின்நா கூறுகிறார், வெய்ஹைய் நகரிலுள்ள ஆகாயம் மிகவும் நீல நிறமுடையது. இதர நகரங்களை விட, அதன் ஆகாயம் உயரமானது என்று இந்நகருக்கு வருகை தருவோரில் பலர் உணர்கின்றனர். வெய்ஹைய் நகரம் பெருமைப்படத் தக்கது இதுவாகும் என நான் கருதுகின்றேன். வெய்ஹை கடலும் இந்நகர மக்கள் பெருமைப்படத் தக்கது. நகரின் பசுமை மயமாக்கத்தினால், மலைகளுக்கிடையில் நகரம் அமைந்துள்ளது. மனிதர் பசுமையான இடத்தில் வாழ்கின்றனர் என்பன போன்ற நிலைமைகள் தோன்றியுள்ளன. இங்கு வாழ்வதால் பெருமைப்படுகின்றேன் என்றார் அவர்.

1  2  3