• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-24 16:32:08    
லிச்சியாங் ஆற்றங்கரை பகுதி மக்களின் வாழ்க்கை

cri

தென் மேற்கு சீனாவின் குவாங்சி சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த வட கிழக்கு பகுதியிலுள்ள குவெய்லின் நகரிலிருந்து யாங்சுக்குச் செல்லும் 84 கிலோமீட்டர் நீளமுடைய லிச்சியாங் ஆற்றங்கரைப் பகுதி, இயற்கை அழகு சிறந்துகாணப்படும் முக்கிய பகுதியாகும். பச்சைப் பட்டுத் துணி நாடா போல, ஏராளமான மலைகளுக்கிடையில் ஓடிவருகின்ற நதி மிகவும் நீளமான ஒரு ஓவியம் போல காட்சியளிக்கின்றது. ஒரு கன மீட்டர் ஆற்று நீரில், மணல் அளவு 0.037 கிலோகிராம் மட்டுமே. தூய்மையான ஆற்று நீரில் நீந்திச்செல்லும் மீன்களை எண்ணிவிடலாம். கி.மு. 200ஆம் ஆண்டில், குவெய்லின் நகரின் தென்கிழக்கிலிருந்து 19 கிலோமீட்டர் தொலைவிலுள்ள லிச்சியாங் ஆற்றின் வட கரையில் கட்டப்பட்ட தொன்மை வாய்ந்த தாசியு நகரம், இந்த எழில் மிக்க இயற்கைக் காட்சித் தலத்தில் அமைந்துள்ளது. சுமார் 5 கிலோமீட்டர் நீளமான பழமை வாய்ந்த கற்பாதையொன்று இந்த நகரின் ஊடாகச் செல்கின்றது. வீதியின் இரு பக்கங்களிலும் 100 ஆண்டுகள் பழமையான செங்கல் வீடுகள் உள்ளன. இவ்வீட்டுக் கதவுகளின் மேல் மரச் செதுக்குகளும், ஒவ்வோராண்டும் ஒட்டப்பட்ட ஓவியங்களும் வரலாற்றின் அடையாளத்தை பயணிகளுக்கு உணர்த்துகின்றன. தாசியு மக்களின் தற்போதைய வாழ்க்கையை உணர வேண்டுமானால், தொன்மை வாய்ந்த வீதியை விட்டு, லிச்சியாங் ஆற்றங்கரைக்குச் சென்று பார்க்க வேண்டும்.

விசாலமான லிச்சியாங் ஆற்றில், இரண்டு, மூன்று மீட்டர் அளவுடைய மூங்கில் படகு முதல் மூன்று மாடி உயரமுடைய சொகுசான பயணிக் கப்பல்கள் வரையான பல்வகை பயணிக் கப்பல்களும் படகுகளும் செல்கின்றன. ஆற்றில் படகு அல்லது கப்பலை செல்லுத்தி, தாசியு மக்கள் பிழைப்பு நடத்துகின்றனர். பல்லாயிரம் ஆண்டுகளாக, தாசியு மக்கள் லிச்சாங் ஆற்றங்கரையில் வாழ்க்கை நடத்திவருகின்றனர். தமது மூதாதையரும் தாமும் தமது தலைமுறையினரும் லிச்சியாங் ஆற்று நீரைச் சார்ந்திருந்து பணம் சம்பாதித்து வாழ்க்கை நடத்திவருவதாக, மூங்கில் படகைச் செலுத்தும் முதியோர் ஹுவாங் சிங் கௌ கூறினார். அவர் கூறியதாவது, என் தகப்பனார், மீன் பிடிப்பவர். எனது தாத்தாவின் அப்பாவும், தாத்தாவின் தாத்தாவும் மீன் பிடிப்பவராவர். அவர்கள் அனைவரும் மீன் பிடிப்பதன் மூலம் பணம் சம்பாதித்து வாழ்க்கை நடத்தினர். அவர்களுடைய வாரிசுகளான நாங்கள் போக்குவரத்து துறையில் ஈடுபடுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்துகின்றோம் என்றார்.

1  2  3