• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-24 16:32:08    
லிச்சியாங் ஆற்றங்கரை பகுதி மக்களின் வாழ்க்கை

cri

பகலில், பயணிக் கப்பல் அல்லது படகு மூலம் பயணிகளுடன் தாசியு மக்கள் லிச்சியாங் ஆற்றில் சுற்றுலா மேற்கொள்கின்றனர். இரவில், தம் வீட்டில் அமைதியாகத் தேநீர் அருந்தி ஓய்வெடுக்கின்றனர். ஆற்றில் செல்லும் கப்பலையும் படகையும் கண்டுகளிப்பதோடு, ஆற்று நீர் அணை மீது மோதும் சத்தத்தைக் கேட்டுக்கொள்வது எவ்வளவோ மகிழ்ச்சி!ஏறக்குறைய இருபது வயதுடைய இளைஞர் ஹுவாங் லியூவெயின் குடும்பத்தினரும் மீன் பிடிப்பதன் மூலம் பணம் சம்பாதித்து வாழ்க்கை நடத்தினர். பின்னர், அவர்களுடைய தகப்பனார் கப்பல் போக்குவரத்து மூலம் சம்பாதித்த பணத்தையும் வாங்கிய கடனையும் கொண்டு 2 பயணிக் கப்பல்களை வாங்கி, உரிமையாளராக மாறி, சுற்றுலா துறையில் ஈடுபடத் துவங்கினார். எழில் மிக்க லிச்சியாங் ஆற்றுக் காட்சியினால், அதிகமான உள் நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் வருகை தருகின்றனர். இதனால், இரு கரை மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டுள்ளது. இது பற்றி ஹுவாங் லியூவெய் கூறியதாவது, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பயணிகள், லிச்சியாங் ஆறு பற்றிப் பேசியதைச் செவிமடுத்தேன். உலகின் பல இடங்களுக்குச் சென்றுவிட்டேன். இவ்விடம், கடவுள் வசிக்கும் இடம் என்று முன்னாள் அமெரிக்க அரசு தலைவர் உள்ளிட்ட இங்கு வருகை தந்த அனைவரும் கூறினர் என்றார் அவர்.

சுற்றுலா துறையின் காரணமாக, தாசியெ மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அது, அவர்களுடைய வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு பகுதியாக மாறிவிட்டது. இது போலவே, லிச்சியாங் ஆற்றுக் கரையின் மற்றொரு காட்சித் தலமான மிங்யு மலையின் அடிவாரத்தில் வாழும் மக்களைப் பொறுத்தவரை, சுற்றுலா சேவையானது, அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு பகுதியாக விளங்குகின்றது.யாங்சு நகரின் தென் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 380 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மிங்யு மலையின் உச்சியில், மாபெரும் கற்சுவர் ஒன்று உள்ளது. கற்சுவரில் பெரிய குகையொன்று காணப்படுகிறது. தூரத்திலிருந்து பார்க்கும் போது, இக்குகை, ஆகாயத்திலான சந்திரன் போல தென்படுகின்றது. இதனால் இது, அங்குள்ள மக்களால் சந்திரக் குகை என்று அழைக்கப்படுகின்றது. மிங்யு மலையின் அடிவாரத்திலிருந்து புறப்பட்டு, நீளமான குறுகிய பாதையில் நடந்துசென்று, கல் ஏணியில் 800 படிகளை ஏறிய பின்னர், மலை உச்சியை அடையலாம். மலை ஏறும் போது பயணிகள் பல்வேறு கோணத்திலிருந்து சந்திரக் குகையைப் பார்வையிடலாம். முழு நிலா, பாதி நிலா, பிறை நிலா ஆகிய கவர்ச்சிகரமான காட்சிகளைக் கண்டறியலாம். மிங்யு மலையில் சுற்றுலா மேற்கொள்ளும் போது, மலைக் காட்சியைக் கண்டுகளிப்பதோடு, வழிகாட்டியாக விளங்குமாறு சுற்றுலா துறையில் ஈடுபட்டுள்ள உள்ளூர் விவசாயி பெண்களைப் பயணிகள் அழைக்கலாம்.

1  2  3