• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-24 16:32:08    
லிச்சியாங் ஆற்றங்கரை பகுதி மக்களின் வாழ்க்கை

cri

அவர்கள், தொழில் முறை வழிகாட்டிகளிடமிருந்து வேறுபடுகின்றனர். அவர்கள் கூறும் விளக்கம், வழங்கிய உணவு வகை, தங்குமிடம், மருத்துவச் சேவை ஆகியவை கிராமப்புற மணம் கமழுகின்றது. அவர்களில் பலர், அந்நிய மொழியில் பயணிகளுடன் உரையாடிக் கருத்துக்களைப் பரிமாறுவது அறியத் தக்கது. 8 வெளிநாட்டு மொழிகளில் பேசக் கூடிய சி சியூசன் அவர்களுடைய சிறந்த பிரதிநிதியாவார். அவர், ஆங்கில மொழியில் நிகழ்த்திய உரை இதோ. கனடா?நீங்கள் எந்த மொழியில் பேசுகிறீர்கள்?கனடாவில் இரண்டு அரசாங்க மொழிகள் உள்ளன. ஆமாம். நான் பிரெஞ்சு மொழியிலும் ஆங்கில மொழியிலும் பேசலாம். சுமார் 6 ஆண்டுகளுக்கு முன், கனடாவிலிருந்து வந்த 2 இளைஞர்கள் மிங்யெ மலையில் ஏறிய போது நோய்வாய்ப்பட்டார். அவர்களுக்கு நான் சாப்பாடு தந்தேன். சீன மூலிகை மருந்தைக் கொண்டு அவர்களுக்குச் சிகிச்சையளித்தேன். அவர்கள் கொடுத்த பணத்தை நான் எடுக்கவில்லை. ஓ, மிகவும் நல்லது. தற்போது, மேன்மேலும் அதிகமான உள்ளூர் மக்கள், சுற்றுலா சேவை துறையில் ஈடுபடுகின்றனர். பயணிகளுக்குச் சேவை புரிவது, அங்குள்ள மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு பகுதியாகும். உணவகம், தங்குமிடம் ஆகியவற்றைப் பயணிகள் எளிதில் தேடிக் கண்டுபிடிக்கலாம். மலைகளும் மரங்களும் சூழந்துள்ள வீடுகளில் யன்னலைத் திறந்துவிட்டதும், தூய்மையான தாவர மணம் கமழுகின்றது. மலையின் அடிவாரத்தில் லிச்சியாங் ஆற்று நீர் சலசலவென்று ஓடுவதைக் கண்டு களிக்கலாம்.

 

1  2  3