• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-11 20:13:52    
திபெத் இன இசை நாடகம்

cri

திபெத் இன இசை நாடகம் என்றால், சீனாவின் சிறுபான்மை தேசிய இனங்களில் ஒன்றான திபெத் இனத்தவர்களிடையே பரவியுள்ள நாட்டுப்புற கலையாகும். திபெத் இன மக்களின் இன்பம், துன்பம், குடும்ப வாழ்க்கை, மனக்கசப்பு முதலியவற்றை கருவாகக் கொண்ட கதைகள் இவை. 700 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் தோன்றிய திபெத் இன இசை நாடகம், திபெத் இன மக்களின் வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புடையது. திபெத் இனத்தவர்கள் பலர் இதை மிகுதியும் விரும்புகின்றனர். தம் வாழ்க்கையில் இருந்து பிரிக்கப்பட முடியாத ஒரு பகுதியாக அதனை கருதுகின்றனர். இதை மேலும் விறுவிறுப்பாக்கவும் பாடுபட்டு வருகின்றனர்.

திபெத் இன இசை நாடகம் பற்றிக் குறிப்பிடும் போது, முதலில், திபெத் வழி பாரம்பரிய புத்த மதத்தின் ஒரு பெரியாரான TangdongJiebu பற்றி கூற வேண்டும். 14வது நூற்றாண்டில், திபெத்தில் இருப்புச் சங்கிலி பாலம் ஒன்று கட்டப்பட்ட போது, நிதிக்கும் தொழிலாளர்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டது. பின்னர், நிதித் திரட்டுவதற்காக, புத்த மதம் பற்றிய கதைகளை, ஆடல்பாடல் இசை நாடகங்களாக இயற்றி, ஆடல்பாடலில் தேர்ச்சி பெற்ற 7 அழகு சகோதரிகளை இந்நாடகங்களில் நடிக்க வைத்து பல்வேறு இடங்களில் அரங்கேற்றினார். இது தான், திபெத் இன இசை நாடகத்தின் துவக்கக் கால வரலாறு.

அவரது அருஞ்செயலை நினைவு கூரும் வகையில், திபெத் இன மக்கள் அவரை திபெத் இன இசை நாடகத்தின் முன்னோடியாக பாராட்டுகின்றனர்.

1  2  3  4