• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-11 20:13:52    
திபெத் இன இசை நாடகம்

cri

திபெத் இன இசை, நாடகம், திபெத் இனத்தவர்களின் வாழ்க்கையில் முக்கிய இடம் வகிக்கின்றது. எனவே, அவர்கள் வசிக்கும் இடமெங்கும் இந்நாடகம் அரங்கேற்றப்படும். திபெத் இனத்தின் வெவ்வேறான மத விழாகளிலும் இது இன்றியமையாதது. இவற்றில், திபெத் இன இசை நாடகமும் Xundun விழாவும் நெடிய வரலாறுடையவை.

கி.பி. 11வது நூற்றாண்டில் Xundun விழா உருவாயிற்று. துவக்கக்காலத்தில், இது ஒரு மத நடவடிக்கை மட்டுமே. திபெத் இன இசை நாடகமும் இவ்விழாவும் 17வது நூற்றாண்டின் நடுப்பகுதியில் இணைந்தன. அப்போது, ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் Xundun விழா நாட்களில் திபெத்தின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த பிரபலமான திபெத் இன இசை நாடகக் குழுக்கள் அனைத்தும், லாசாவிலுள்ள கோயில்களில் திரண்டு அரங்கேற்றம் நடத்தும். கால போக்கில், Xundun விழா, திபெத் இன இசை நாடகம் முக்கிய இடம் வகிக்கும் விழாவாக மாறி விட்டது. எனவே, Xundun விழா, திபெத் இன இசை நாடக விழா என அழைக்கப்படுகின்றது. விழா நாட்களில், கோயில்கள் மற்றும் பூங்காக்களில், உள்நாட்டு வெளிநாட்டு பயணிகள் தாம் விரும்பும் பொருட்களை வாங்கலாம். தவிரவும், உள்ளூர் வாசிகளுடன் சேர்ந்து பார்லி மது அருந்துவர். இறைச்சி உட்கொள்வர். இடைஇடையே, அவர்கள் திபெத் இன இசை நாடகத்தை கண்டு ரசிப்பர்.

வெளிநாட்டுடன் திபெத்தின் பண்பாட்டுப் பரிமாற்றம் நாளுக்குநாள் அதிகரித்துவருவதால், திபெத் இன இசை நாடகமும் சீனாவின் இதர பிரதேசங்களிலும் வெளிநாடுகளிலும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது. கடந்த சில ஆண்டுகளில், திபெத்தின் இந்நாடகக் குழுக்கள் பல நாடுகளில் கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றியுள்ளன. அவை பெரிதும் வரவேற்கப்பட்டன.


1  2  3  4