
துவக்ககாலத்தில் திபெத் இன இசை நாடகங்களில், முக்கியமாக ஆடல் வடிவத்தில் எளிதான கதைகள் நடிக்கப்பட்டன. பின்னர், நாட்டுப்புற கலைஞர்கள் அவற்றை தொடர்ந்து வளமாக்கி வருவதன் காரணமாக, தற்போதைய இசை நாடகங்களில், பாடலும், வசனங்களும் சேர்ந்துள்ளன. திபெத் இன இசை நாடகம், தனிச்சிறப்பியல்புடைய, தேசிய இன தனித்துவம் வாய்ந்த நாடகமாக மாறுவதற்கு இவை துணை புரிகின்றன. திபெத் தன்னாட்சிப்பிரதேசத்து திபெத் இன இசை நாடகக் குழுவின் தலைவர் Zhaxiduoji இதைப் பற்றி கூறியதாவது

"திபெத் இன இசை நாடகம் வளர்ந்து பக்குவமடைந்த பின், அது முழுமையான வடிவம் பெற்றது. தனிச்சிறப்புமிக்க இலக்கியச் செழுமை உடையது. கதைகளின் அருமையை அது கவனிக்கின்றது. தவிரவும், அதன் மற்றொரு தனிச்சிறப்பு என்ன என்றால், நாட்டுப்புற ஆடல்பாடல்கள் இதில் அதிகமாக இடம்பெறுகின்றன. மேலும், மகிழ்ச்சி தரும் இசை நாடகங்களில் அது கவனம் செலுத்துகின்றது. ரசிகர்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்யும் உரையாடலிலும் கவனம் செலுத்தப்படுகின்றது" என்றார் அவர்.
திபெத்தில், இந்நாடகங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். முதிய கலைஞர்கள் தவிர, பல இளைஞர்களும் சிறு வயதிலிருந்தே திபெத் இன இசை நாடகங்களை கண்டு ரசிக்க விரும்புகின்றனர். இதைக் கற்றுக்கொள்ளவும் விரும்புகின்றனர். இதனால், இம்முது பெரும் கலை வளர்வதற்கு வாரிசுகள் உள்ளனர்.
1 2 3 4
|