
பின்னர், சிறு வியாபாரத்தில் ஈடுபடத்துவங்கினார். கிராமத்தில் வாழ்க்கைப் பயன்பாட்டுப் பொருட்களை விற்பனை செய்யும் சிறு கடையை அவர் திறந்தார். ஆனால், வாடிக்கைக்காரர்களிடமிருந்து உள்ளூரில் விளையும் பார்லி மட்டுமே அவருக்குக் கிடைத்தது. அவர் நினைவுகூர்யதாவது:
"அப்போது பொருள் விற்பனை மூலம் ரொக்கப் பணம் கிடைக்கவில்லை. ஏனெனில், அனைவரும் வறியவர்கள். அவர்கள் தானியத்தைக்கொண்டு பரிமாற முடியும். இவ்வாறு கிடைத்த பார்லியை விற்க லாசா உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது" என்றார் அவர்.

பார்லி வற்பனை அவ்வளவு நல்லதாயில்லை என்று கவலைப்பட்ட அவர், தற்செயலான ஒரு வாய்ப்பில், பார்லி பதனீட்டுத்தொழில் திபெத்தின் இதர இடங்களில் விறுவிறுப்பாக நடைபெறுவதை அறிந்து கொண்டார். இச்செய்தியை அறிந்த அவர், பார்லி சந்தையில் நல்ல விற்பனை வாய்ப்பு உண்டு. தமது ஊரான Bai Lang மாவட்டத்தில் தரமான பார்லி விளைகின்றது. பார்லி மாவைப் பதனிடும் தொழில், குறைந்த செலவுடன் விரைவாக பயன்பெறும் தொழிலாகும் என கருதினார்.
1999ம் ஆண்டில், Luobudanzeng உள்ளூரில் முதலாவது பார்லி பதனீட்டு ஆலையை நடத்தினார். உற்பத்திப்பொருட்களுக்கு "Luo Dan"என்ற வணிக உரிமம் வழங்கப்பட்டது. ஆனால், துவக்கக்காலத்தில் அனுபவம் குன்றியதால் பதனீட்டு ஆலையில் தயாரான பார்லி பொருள் அவ்வளவு ருசியில்லை என்ற காரணமாக நன்கு விற்கவில்லை. ஏராளமான பார்லி வீணாயிற்று.
1 2 3
|