
படிப்பினையிலிருந்து இடைவிடாது கற்றுக்கொண்டு அனுபவம் பெற்ற இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அவர் வெற்றி பெற்றார். அப்போதைய நிலையை நினைவுகூர்ந்த போது அவர் உணர்ச்சிவசப்பட்டு கூறியதாவுது:
சிகாச்சே சந்தையில் எனது பார்லி பொருட்களை விற்பனை செய்த போது, மிகவும் வரவேற்கப்பட்டது. எல்லையில்லா மகிழ்ச்சி எனது மனதில் உருன்டோடியது" என்றார் அவர்.

இதற்குப் பின், Luobudanzengஇன் பதனீட்டு ஆலை விறுவிறுப்பாக இயங்கத் துவங்கியது. உற்பத்திப்பொருட்களின் தரத்தை உயர்த்தும் வகையில் பதனீட்டு ஒழுங்கு, நிர்வாக முறை முதலியவற்றை ஆராய்ந்தார். தவிரவும், அவ்வப்போது ஏற்பட்ட பிரச்சினைகளை தீர்த்தார். மேலும், அவர் சொந்தமாக வடிவமைத்து தயாரித்த கோவையான பதனீட்டு சாதனங்கள் மூலம் நிதியைச் சிக்கனப்படுத்தினார். உற்பத்திப் பயனும் உயர்ந்துள்ளது.
Luobudanzeng வளமடைந்தார். இருப்பினும், தம் கிராமவாசிகளை மறக்கவில்லை. அவர் வேலைக்கு அமர்த்தியுள்ள 90 விழுக்காட்டினர். வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஆண்டுதோறும் உள்ளூர் மக்களுக்கு இவ்வாலையிலிருந்து இரண்டு லட்சத்து 70 ஆயிரம் யுவான் வருமானம் கிடைப்பதாக புள்ளிவிவரம் கூறுகிறது.
1 2 3
|