
Luobudanzeng பார்லி பதனீட்டுத்தொழிலை வளர்ச்சியுறச்செய்வதற்கு ஆதரவாக, திபெத் தன்னாட்சிப் பிரதேச அரசு, அவருக்கு 50 ஆயிரம் யுவான் நிதியுதவி வழங்கியது. சிகாச்சே வட்டார தொழில் நிறுவன சங்கம் இரண்டு லட்சம் யுவான் மதிப்புள்ள வட்டியில்லா கடன் அளித்துள்ளது. சாதனங்களை சீராக்குவதற்கு இப்பணத்தொகை பயன்படுகிறது.

சில ஆண்டுகால முயற்சி மூலம், தற்போது, அவரது பதனீட்டு ஆலையில் துவக்ககாலத்தில் சில தொழிலாளர்கள் மட்டுமே இருந்த உள்ள கைவினை பட்டறை என்ற நிலையிலிருந்து தற்போது, 70 தொழிலாளர்கள் வேலை செய்யும் ஆலையாக மாறிவிட்டது. அதன் ஆண்டு விற்பனை மதிப்பு, 23 லட்சம் யுவானைத் தாண்டியுள்ளது. அண்மையில், "Luo Dan" வணிக உரிமம் உடைய பார்லி பொருள் சர்வதேசச் சந்தையில் நுழையக்கூடிய சீட்டைப் பெற்றிருக்கின்றது.
பார்லி பொருளுக்கு ரத்த கொழுப்பைக் கட்டுப்படுத்தும் மருத்துவ குணம் உண்டு. நோய் தடுப்பு சக்தியும் உடையது. எனவே, திபெத் மக்களின் முக்கிய தானிய உணவான பார்லி பொருள் மேன்மேலும் அதிகமான மக்களால் வரவேற்கப்பட்டுள்ளது. பார்லி பொருள் விற்பனையை மேலும் பெரிதாக்குவதில் தமக்கு நம்பிக்கை உண்டு என்று Luobudanzeng கூறினார். 1 2 3
|