நாள்தோறும் விடியற்காலை, He Nan மாநிலத்தின் 35 வயதான விவசாயி He Yan Mei, தனது கணவன் உழவு தொழிலுக்கான 3 சக்கர வண்டியை ஓட்டி, பொருள் போக்குவரத்து பணியில் ஈடுபட வகைசெய்தார். 2003ஆம் ஆண்டு, வறுமை ஒழிப்பு பொருளாதார ஒத்துழைப்பு நிறுவனத்திலிருந்து He Yan Mei 2 ஆயிரம் யுவானை கடனாக வாங்கி, இவ்வண்டியை வாங்கினார். இவ்வண்டியை வாங்கிய பின், தனது குடும்பத்தின் வருமானம் பெரிதும் அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார். அவர் கூறியதாவது:
"நாள்தோறும் எங்கள் வருமானம் 50 யுவானைத் தாண்டுகின்றது. கிராமப்புறங்களில் இது அதிகம்." என்றார், அவர்.
He Yan Mei போன்ற, வறிய கிராமப்புறத்தில் வாழும் மக்களைப் பொறுத்த வரை, 2 ஆயிரம் யுவான் தொகை, குடும்பம் வறுமை நிலைமையிலிருந்து விடுபடத் துணை புரியும். முன்பு, He Yan Mei வாழும் Nan Zhao மாவட்டம் ஒதுக்குப்புறமானது, பொருளாதாரத்தில் பின்தங்கியது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில், He Yan Mei போல், உள்ளூர் பிரதேசத்தின் பல குடும்பங்கள், அரசு வழங்கும் சிறு தொகை கடனைப் பயன்படுத்தி, பொருள் போக்குவரத்து, நீர் வாழ் உயிரினங்களின் வளர்ப்பு, தொழில் மர சாகுபடி ஆகிய பணிகளில் ஈடுபடுகின்றன. அவர்களின் வாழ்க்கை நாளுக்கு நாள் மாற்றமடைந்துள்ளது.
Nan Zhao மாவட்டத்து வறுமை ஒழிப்பு பொருளாதார ஒத்துழைப்பு நிறுவனம், வறுமையில் அல்லல்படும் விவசாயிகளுக்கு கடன் வழங்குகின்றது. இந்நிறுவனத்தின் தலைவர் Gou Chang Yuan கூறியதாவது:
"1995ஆம் ஆண்டில், Nan Zhao மாவட்டத்தில் சிறு தொகை கடன் வழங்குவது துவங்கியது. வறுமை ஒழிப்பு நிதி, விவசாயிகுடும்பங்களுக்கு தங்கு தடையின்றி கிடைப்பதற்காக சீன சமூக அறிவியல் கழகம் மூலம், கிராமியடிரஸ்ட் நிதி தொழில் நுட்பத்தை உட்புகுத்தி, சீனாவில் 4 சிறு தொகை கடன் பரிசோதனை தளங்களை நிறுவியுள்ளது. Nan Zhao மாவட்டம், இவற்றில் ஒன்றாகும். 10 ஆண்டுகால செயல்பாடு மூலம், எங்கள் நிறுவனம், 7715 விவசாயிகுடும்பங்களுக்கு கடனை வழங்கியுள்ளது. மொத்த கடன் தொகை, 6 கோடியே 50 லட்சத்தைத் தாண்டியுள்ளது" என்றார், அவர்.
1 2 3
|