• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-28 22:06:20    
விவசாயிகளுக்கு வழங்கும் சிறு தொகை கடன்

cri

சீன சமூக அறிவியல் கழகம் நிறுவிய, சிறு தொகை கடனை வழங்கும் வறுமை ஒழிப்பு தளங்களின் நிதி, கிராமியடிரஸ்ட், சிட்டி வங்கி குழு உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் வழங்கும் குறைந்த வட்டியுடன் கூடிய கடன், நன்கொடை ஆகியவற்றைச் சேர்ந்துள்ளது. 1990ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதி முதல், விவசாயிகள் தொழில் நுட்ப திறனை கற்றுக்கொண்டு, உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டு, வருமானத்தை அதிகரிக்க துணை புரியும் பொருட்டு, சீன சமூக அறிவியல் கழகத்தைச் சேர்ந்த கிராமப்புற வளர்ச்சி ஆய்வகம், இந்த நன்கொடை நிதியை சிறு தொகை கடன் என்ற முறையில், விவசாயிகுடும்பங்களுக்கு வழங்கி வருகிறது.

ஒட்டுமொத்த கடன் வாங்கி, சிறு தொகையாக கடனைத் திருப்பிச் செலுத்துவது என்ற முறை நடைமுறைப்படுத்தப்படுவதால், விவசாயிகள் கடனை வாங்குவதில் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். கடன் திருப்பிச்செலுத்தும் விகிதம் மிக அதிகமாக உள்ளது. இது வரை, 99.99 விழுக்காடு கடன்கள் கட்டப்பட்டு விட்டன.

சீனாவின் பல்வேறு இடங்களில், Nan Zhao மாவட்டத்து வறுமை ஒழிப்பு பொருளாதார ஒத்துழைப்பு நிறுவனம் போன்ற 100க்கு அதிகமான நிறுவனங்கள் இருக்கின்றன. இந்நிறுவனங்களின் மொத்த நிதி தொகை சுமார் 100 கோடி யுவானாகும். இத்தொகையில், பெரும்பகுதி வெளிநாடுகளிலிருந்து வந்துள்ளது. இந்த நிதியினால் மிக பெரிய நலன் விளைந்து, மிக தேவையான இடத்தில் இதை பயன்படுத்தும் பொருட்டு, பல்வேறு நிறுவனங்களின் பணியாளர்கள் இந்த நிதியை மிகவும் கவனத்துடன் நிர்வகிக்கின்றனர்.

ஐ.நா. வளர்ச்சி திட்டப் பணியகம் வழங்கும் சிறு தொகை கடன் நிதி உதவி திட்டப்பணியை நேரடியாக கண்காணித்து நிர்வகிக்க, சீன வணிக அமைச்சகம் சிறப்பு பணியகத்தை நிறுவியுள்ளது. இப்பணியகத்தின் தலைவர் Bai Cheng Yu கூறியதாவது:

"சீன நாட்டில், கிராமப்புற வளர்ச்சி சங்க தொடரமைப்பு எனும் மிகவும் முழுமையான நிர்வாக தொடரமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 48 மாவட்டங்களிலுள்ள சிறு தொகை கடன் நிறுவனங்களில், தொழில் வரையறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிறுவனங்களில், முறையான கணக்கு வைக்கும் முறையும், தகவல் நிர்வாக அமைப்பு முறையும் உருவாக்கப்பட்டுள்ளன. சீன அரசும், சர்வதேச நிறுவனங்களும் உருவாக்கிய இரு தரப்பு உடன்படிக்கையின் கோரிக்கைக்கிணங்க, பல்வேறு நிறுவனங்கள் இந்த நிதியை வழங்குவதற்கு உத்தரவாதம் தரும் பொருட்டு, ஆண்டுதோறும் இந்நிறுவனங்களை தணிக்கை செய்கின்றோம்." என்றார் அவர்.

1  2  3