• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-28 22:06:20    
விவசாயிகளுக்கு வழங்கும் சிறு தொகை கடன்

cri

சீனாவில் சிறு தொகை கடனின் பயன், நிதியின் சிறந்த செயல்பாடு ஆகியவற்றை, நிதியுதவி அளிக்கும் உலக வங்கி, ஐ.நா. வளர்ச்சித் திட்டம், சிட்டி வங்கி குழு உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் பாராட்டியுள்ளன. சில நிறுவனங்கள் நிதி வழங்குவதை அதிகரித்துள்ளன. எடுத்துக்காட்டாக, 2001ஆம் ஆண்டு, 13 லட்சம் அமெரிக்க டாலரை நன்கொடையாக சிட்டி வங்கி குழு வழங்கியது. அண்மையில், இவ்வங்கி குழு 15 லட்சம் அமெரிக்க டாலரை வழங்கியுள்ளது. சிறு தொகை கடன் திட்டப்பணியின் பரவல் பற்றும் பயிற்சிப் பணிக்கு இவ்வுதவி தொகை பயன்படும். Citigroup சீனாவிலுள்ள தலைமை இயக்குநர் Catherine Weir அம்மையார் கூறியதாவது:

"சிறு தொகை கடனின் பயனையும் நலனையும் நாங்கள் அதிக பட்சம் உயர்த்த வேண்டும். சீனாவில் வறிய பிரதேசங்களின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தும் பொருட்டு, கடன் வழங்கும் நிறுவனங்களின் பணியாளருக்கு பயிற்சி அளிப்பதன் மூலம், சிறு தொகை கடன் பயன்பாட்டை மேலும் உயர்த்த முடியும். " என்றார் அவர்.

சீனாவில், கிராமப்புற நம்பிக்கை ஒத்துழைப்பு நிறுவனம், வேளாண் வங்கி ஆகியவை, விவசாயிகளுக்கு சிறு தொகை கடனை வழங்குகின்றன. இருந்த போதிலும், சிறு தொகை கடன் சேவைக்கு பணியாளர் பற்றாக்குறையால் சில ஒதுக்குப்புறமான பின்தங்கிய பிரதேசங்களில், முழுமையாக கடன் வழங்க முடியவில்லை. இதனால், சர்வதேச சமூகத்தின் நன்கொடையைக் கொண்டு நிறுவப்பட்டுள்ள அரசு சாரா சிறு தொகை கடன் நிறுவனங்கள், பயனளித்து இந்தக் குறையை நிரப்புகின்றன என்று கிராமப்பறப் பிரச்சினைகள் பற்றிய சீன நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சீனாவின் சிறு தொகை கடன் திட்டப்பணியில் மேலும் பல சர்வதேச நிறுவனங்கள் கவனம் செலுத்தி, நிறைய சீன விவசாயிகளுக்கு நலனைத் தர வேண்டும் என்று இந்த நிபுணர்கள் விருப்பம் தெரிவிக்கின்றனர்.


1  2  3