செய்தியாளர்........சீனத் தொழில்முனைவோர்களும் அழைப்பு விடுக்கிறீர்களா?
பிர்மென்.....ஆமாம். சீன அரசவையின் செய்தி அலுவலகம், பெய்சிங் மாநகர அரசாங்கம் ஆகியவற்றுடன் நாங்கள் ஒத்துழைக்கின்றோம். சீனாவின் ஷாங்காய் மாநகரில் உள்ள போசான் இரும்புருக்கு கூட்டு நிறுவனம் உள்ளிட்ட 14 கூட்டு நிறுவனங்களின் தலைமை இயக்குனர்களுக்கு கூட்டாக அழைப்பு விடுத்துள்ளோம்.
செய்தியாளர்.....இந்த கருத்தரங்கில் எது முக்கிய தலைப்பாக விவாதிக்கப்படும்?
பிர்மென்.....பொதுவாக கூறினால் பின்வரும் பிரச்சினைகள் முக்கியமாக விவாதிக்கப்படும். எடுத்துக்காட்டாக, சீனா உள்ளிட்ட சில ஆசிய நாடுகள் உலக பொருளாதாரத்துக்கு ஏற்படுத்தும் அறைகூவலும் வாய்ப்பும், நிதி துறை, பிரதேச பொருளாதாரம், கார் தயாரிப்பு துறை உள்ளிட்ட உயர்வேகத்துடன் வளரும் துறைகள், சுற்று சூழல் பாதுகாப்பு, எரியாற்றல் முதலியனவாகும்.
1 2 3
|