கருத்தரங்கு நடைபெறும் போது நாங்கள் சீனாவுடன் தொடர்புடைய "விளையாட்டு"என்ற தலைப்பு பற்றி நடைபெறும் விவாதத்தில் கலந்து கொள்வோம். 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு பந்தயங்கள் கொண்டு வரக் கூடிய வணிக வாய்ப்பு, விளையாட்டு சந்தையின் வளர்ச்சி, விளையாட்டு தொழில்முறை மயமாக்க மேம்பாடும் குறைகளும் முதலியவை பற்றி அப்போது முக்கியமாக விவாதிக்கப்படும்.
அதேவேளையில் கருத்தரங்கில் கலந்து கொள்வோர் பொருளாதார உலகமயமாக்க முன்னேற்றப் போக்கில் உலகளவிலான பணியாளர்களை எவ்வாறு நிர்வகிப்பது, உலகளவிலான புகழ்பெற்ற உற்பத்தி பொருட்களை எவ்வாறு கவனித்து நிர்வகிப்பது, மற்றும் இந்த துறையில் சீனக் கூட்டு நிறுவனங்கள் பெற்றுள்ள அனுபவத்திலும் புத்தாக்கத்திலும் குறிப்பாக கவனம் செலுத்துவோம். சீனக் கூட்டு நிறுவனங்களின் தலைமை இயக்குனர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சர்வதேச தொழில் நிறுவனங்களின் தலைமை இயக்குனர்களுடன் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனர். 1 2 3
|