• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-11 21:45:54    
மேற்கிலிருந்து கிழக்கிற்கு இயற்கை வாயுவை அனுப்பும் திட்டப்பணி

cri

மேற்கு சீனாவின் நிறையக் கிடைக்கும் இயற்கை வாயுவை, எரி ஆற்றல் பற்றாக்குறை நிலவும் மத்திய மற்றும் கிழக்கு பகுதிக்கு அனுப்பும் பொருட்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன், மேற்கிலிருந்து கிழக்கிற்கு இயற்கை வாயுவை அனுப்பும் திட்டப்பணியை துவக்கிட சீனா பெரும் முதலீடு செய்தது. 2004ஆம் ஆண்டின் இறுதியில், 4 ஆயிரம் கிலோமீட்டர் நீளமான இந்தக் குழாய்ப்பாதை, வணிக இயக்கத்தில் ஈடுபட்டது. தற்போது, சீனாவின் மேற்குப் பகுதியின் இயற்கை வாயு, மத்திய மற்றும் மேற்கு பகுதியின் தொழிற்சாலைகளிலும், குடிமக்களின் வீடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

சீனாவின் மத்திய மற்றும் கிழக்கு பிரதேசங்கள், பொருளாதார ஆற்றல் மிக்கவை. பொருளாதாரம் விரைவாக வளர்ச்சி கண்டுள்ள இப்பிரதேசத்தில், எரியாற்றல் தேவை அதிகம். ஆனால் உள்ளூரில் எரியாற்றல் பற்றாக்குறை நிலவுகிறது. இதற்கிடையில், இயற்கை வாயு வளம் அதிகமாக உள்ள மேற்கு சீனாவில் பொருளாதார வளர்ச்சி பின்தங்கியுள்ளது. மத்திய மற்றும் கிழக்கு பகுதியின் எரி ஆற்றல் பற்றாக்குறை பிரச்சினையைத் தீர்க்கும் வேளையில், மேற்கு பகுதியின் எரிவாயு வளத்தை வளர்க்கும் பொருட்டு, 2002ஆம் ஆண்டில், மேற்கிலிருந்து கிழக்கிற்கு இயற்கை வாயுவை அனுப்பும் திட்டப்பணியை சீனா துவங்கியது. இத்திட்டப்பணிக்கு மொத்தம் 14 ஆயிரம் கோடி யுவான் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது வரை, சீனாவில் மிக பெரிய, மிக நீளமான, மிக அதிக முதலீட்டுடைய எரிவாயு கொண்டு செல்லும் திட்டப்பணி, இதுவாகும்.

சீனாவில் ஷாங்காய் மிக பெரிய தொழில் மற்றும் வணிக நகராகும். இத்திட்டப்பணியின் மிக பெரிய சந்தையுமாகும். ஷாங்காய் மாநகருக்கு அனுப்பப்படும் இயற்கை வாயு, இக்குழாய்ப்பாதையில் அனுப்பும் மொத்த இயற்கை வாயு அளவில் மூன்றில் ஒரு பகுதியாகும். 2004ஆம் ஆண்டின் துவக்கத்தில், ஷாங்காய்க்கு இயற்கை வாயு வழங்கப்படத் துவங்கியது. ஆண்டுதோறும் ஷாங்காய்க்கு தேவைப்படும் இயற்கை வாயு அளவில் 85 விழுக்காடு இதர பிரதேசத்திலிருந்து அனுப்பப்படுகின்றது என்று ஷாங்காய் மாநகராட்சி துணை தலைவர் Zhou Yu Peng கூறினார். இத்திட்டப்பணியில் அனுப்பும் இயற்கை வாயு, ஹாங்காய் மாநகரின் குடிமக்களின் இயல்பான வாழ்க்கைக்கு உத்தரவாதம் தந்துள்ளது. மேற்கு பகுதியிலிருந்து அனுப்பப்படும் இயற்கை வாயு, ஷாங்காய் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் கூறியதாவது:

1  2  3