• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-11 21:45:54    
மேற்கிலிருந்து கிழக்கிற்கு இயற்கை வாயுவை அனுப்பும் திட்டப்பணி

cri

"2003ஆம் ஆண்டில் ஷாங்காய் மாநகரில் 48 கோடி கன மீட்டர் இயற்கை வாயு பயன்படுத்தப்பட்டது. 2004ஆம் ஆண்டில், சுமார் 100 கோடி கன மீட்டர் இயற்கை வாயு பயன்படுத்தப்பட்டது. இது 2003ஆம் ஆண்டில் இருந்தது போல் இரு மடங்காகும். இந்த அதிக வாயு, இந்தக்குழாய்ப்பாதை மூலம் அனுப்பப்பட்டுள்ளது. பல குடிமக்களின் வாழ்க்கைக்கு இது உத்தரவாதம் அளித்துள்ளது. இது மட்டுமல்ல, நிலக்கரி உள்ளிட்ட எரியாற்றலுடன் ஒப்பிடும் போது, இயற்கை வாயுவின் தரம் மேலும் சிறந்தது. இதனால், மக்களின் வரவேற்பை இது பெற்றுள்ளது. "என்றார் அவர்.

மேற்கிலிருந்து கிழக்கிற்கு இயற்கை வாயுவை அனுப்பும் திட்டப்பணியினால், தற்போது, ஷாங்காய் மாநகரின் இயற்கை வாயு பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, முன்பு இருந்த சில லட்சத்திலிருந்து 13 லட்சமாக அதிகரித்துள்ளது என்று Zhou Yu Peng எடுத்துக்கூறினார்.

இத்திட்டப்பணி காரணமாக, நீண்டகாலமாக எரியாற்றல் பற்றாக்குறை நிலவிய கிழக்கு சீனாவில் நிலைமை தணிவு செய்யப்பட்டுள்ளது. சிங்கியாங் உள்ளிட்ட மேற்கு பகுதி, பயனடைந்துள்ளது. எடுத்துக்காட்டாக, இத்திட்டப்பணிக்கான மொத்த முதலீட்டு தொகையில், சிங்கியாங்க்கு 2 ஆயிரம் கோடி யுவான் வழங்கப்பட்டுள்ளது. இயற்கை வாயு வயலின் (gas field) வளர்ச்சிக்கு இது பயன்படும். தவிர, எரிவாயு குழாய் திட்டப்பணியில் பயன்படும் கட்டிடப்பொருட்களும் இயந்திர சாதனங்களும் பெரும்பாலும் சிங்கியாங்கில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. சிங்கியாங்கின் மூலவள மேம்பாட்டை பொருளாதார மேம்பாடாக இத்திட்டப்பணி மாற்றி, உள்ளூர் பொருளாதாரத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்தியுள்ளது என்று சிங்கியாங் விகுர் இன தன்னாட்சி பிரதேசத்தின் வளர்ச்சி மற்றும் சீர்திருத்தக் கமிட்டித் தலைவர் Liu Yan Liang செய்தியாளருக்கு கூறினார். அவர் கூறியதாவது:

"சிங்கியாங்கின் மூலவள மேம்பாடு பொருளாதார மேம்பாடாக மாறுவதில், மேற்கிலிருந்து கிழக்கிற்கு இயற்கை வாயுவை அனுப்பும் திட்டப்பணி, முக்கிய முன்னேற்றமாகும். சிங்கியாங்கின் நிலக்கரி வளம், சீனாவில் 40 விழுக்காடு வகிக்கின்றது. எண்ணெய் வளம், நாட்டின் நிலப்பரப்பில் 30 விழுக்காடு வகிக்கின்றது. இயற்கை வாயு வளம், 34 விழுக்காடு வகிக்கின்றது. இனி, மூலவள மேம்பாட்டை தொழில் மேம்பாடாகவும், பொருளாதார மேம்பாடாகவும் மாற்றுவது, சிங்கியாங்கின் வளர்ச்சி திசையாகும்." என்றார் அவர்.

1  2  3