இத்திட்டப்பணி வணிக இயக்கத்தில் ஈடுபட்ட பின், ஆண்டுதோறும் சிங்கியாங்கில் பல நூறு கோடி யுவான் வருமானம் அதிகரித்துள்ளது. இது வரை Talimu இயற்கை வாயு வயலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இயற்கை வாயு படிவு 60 ஆயிரம் கோடி கன மீட்டரை எட்டியுள்ளது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியின் பொருளாதார வளர்ச்சியை இத்திட்டப்பணி விரைவுபடுத்துவது மட்டுமல்ல, சீனாவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதியின் உயிரினச்சூழலை மேம்படுத்தி, காற்று மாசுபாட்டை குறைத்து, தொடர்ச்சியான வளர்ச்சியை நனவாக்க முடியும் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டினர். திட்டத்தின் படி, 2006ஆம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் இத்திட்டப்பணி 1200 கோடி கன மீட்டர் இயற்கை வாயுவை கொண்டு செல்லும். இதன் விளைவாக, ஒரு கோடியே 60 லட்சம் டன் நிலக்கரிக்கு பதிலாக இது பயன்படும்.
இத்திட்டப்பணி வணிக இயக்கத்தில் ஈடுபடுவது, சீனாவின் இயற்கை வாயு தொழில், விரைவாக வளர்ச்சியடையும் கால கட்டத்தில் நுழைந்துள்ளதை வெளிப்படுத்தியுள்ளது என்று சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்தக் கமிட்டியின் எரியாற்றல் பியூரோவின் தலைவர் Xu Ding Ming செய்தியாளரிடம் கூறினார். அவர் கூறியதாவது:
"சீனாவில் இயற்கை வாயு வளம் அதிகம். சுமார் 14 லட்சம் கோடி கன மீட்டர் இயற்கை வாயு தோண்டி எடுக்கப்படும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். தற்போது 3 லட்சம் கோடி கன மீட்டர் வாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இயற்கை வாயு தொழில் முன்னேறும் கால கட்டத்தில் இருக்கின்றது." என்றார் அவர்.
சீனப் பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சி, இயற்கை வாயு தேவையின் அதிகரிப்பு ஆகியவற்றுடன், எரியாற்றல் மற்றும் மின்சார வினியோக பற்றாக்குறையைப் போக்கி, சுத்தமான எரியாற்றல் வினியோகத்தை அதிகரித்து, எரியாற்றல் கட்டமைப்பைச் சரிப்படுத்துவதற்கு மேற்கிலிருந்து கிழக்கிற்கு இயற்கை வாயுவை அனுப்பும் திட்டப்பணி முக்கிய பங்காற்றும் என்று அவர் கூறினார். 1 2 3
|