18 ஆண்டுகளுக்கு முன், 42 வயதான சுங் சிங் ஹொவ் தொழில் நடத்தத் துவங்கினார். சீன குளிர் குளிர் பான துறையில் முன்னோடியாக தான் மாறுவேன் என்று அப்போது அவர் நினைக்கவில்லை.
இவ்வாண்டு 60 வயதான சுங் சிங் ஹொவ் உரமும் உறுதியான கட்டுடலும் கொண்டவர், பேசும் போது குரல் உரக்க ஒலிப்பது இல்லை. அவரின் சிந்தனை தெளிவாக இருக்கிறது. 18 ஆண்டுகளுக்கு முன் சீனாவின் கிழக்கு பகுதியிலுள்ள சே ஜியாங் மாநிலத்தில், அவர் மற்ற இருவர்களுடன் சேர்ந்து சிறிய ரக உணவு உற்பத்தி ஆலையை துவக்கினார். பிறகு அவர்களின் ஆலை படிப்படியாக வலுப்பட்டு, குளிர் குளிர் பானம் மற்றும் உணவு பொருட்களை உற்பத்தி செய்யும் பெரிய ரக தொழில் நிறுவனமாக வளர்ந்து விட்டது. தொழில் தொடங்கிய 4 ஆண்டுகளுக்கு பின், ஹாங் சோ Wahaha குழும கூட்டு நிறுவனம் உருவாக்கப்பட்டு, முன்னேற்றப் பாதையில் நடை போடலாயிற்று.
5 ஆண்டுகால வளர்ச்சி மூலம், Wahaha குழும கூட்டு நிறுவனம் சீனாவில் புகழ்பெற்ற குளிர் பான உற்பத்தி தொழில் நிறுவனமாக மாறிவிட்டது. ஆனால் நடப்பு காலக்கட்டத்தின் சாதனை சுங் சிங் ஹொவுக்கு மனநிறைவு தரவில்லை. புதிய பிரச்சினையை பற்றி அவர் யோசிக்கலானார். அதாவது அவரின் குழுமம் எவ்வாறு விரைவாக சீராக வளர்ச்சி அடைய முடியும். பன்னாட்டு கூட்டு நிறுவனத்துடன் ஒத்துழைப்பு மேற்கொள்வதென அவர் முடிவு எடுத்தார்.
அந்நிய முதலீட்டை உட்புகுத்தும் போது, தொழில் நிறுவனத்தைக் கட்டுப்படுத்தும் முக்கிய அதிகாரத்தைக் கொண்டிருப்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். முன்னாள் சீன தொழில் நிறுவனத்தில் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்களை கூட்டு முதலீட்டு தொழில் நிறுவனம் வேலையிலிருந்து நீக்கக் கூடாது என்று அவர் கோரினார். பேட்டி அளித்த போது அவர் செய்தியாளரிடம் காரணத்தை விளக்கிக் கூறினார்.
"பன்னாட்டு கூட்டு நிறுவனத்தின் தொழில் நுட்பத்தையும் முதலீட்டையும் பயன்படுத்தி, எங்கள் தொழில் நிறுவனத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்துவது என்பது அந்நிய முதலீட்டை நாங்கள் உட்புகுத்துவதன் நோக்கமாகும். கூட்டு முதலீட்டு தொழில் நிறுவனத்தை உருவாக்கும் போது நிர்வாக அதிகாரம் எங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், எங்கள் தொழில் நிறுவனத்தை பன்னாட்டு கூட்டு நிறுவனத்துக்கு விற்றது போலாகிவிடும். தவிர, இந்த பணியாளர்களைச் சார்ந்து தான் எங்கள் தொழில் நிறுவனம் வளர்ச்சி அடைந்துள்ளது. அவர்களின் நலனுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது" என்றார் அவர்.
1 2 3
|