தற்போது, சீனாவில் மிகப் பெரிய குளிர் பானம் உற்பத்தி தொழில் நிறுவனமாகவும் உலகில் 5வது பெரிய குளிர் பானம் உற்பத்தி தொழில் நிறுவனமாகவும் ஹாங் சோ Wahaha குழும கூட்டு நிறுவனம் மாறிவிட்டது. சீனாவின் உள் நாட்டில் நுகரப்பட்ட ஒவ்வொரு 6.25 போட்டல்களில் ஒன்று Wahaha குழுமத்தின் உற்பத்திப் பொருளாகும்.
சுங் சிங் ஹொவ் Wahaha குழுமத்துக்குத் தலைமை தங்கி, சீன குளிர் பான துறையில் பல அற்புதங்களைச் செய்துள்ளார். Coca-cola மற்றும் Pepsi-cola ஓரளவில் ஆதிக்கம் செலுத்தும் சீனாவின் cola சந்தையில், Fei Chang-colaவை அவர் முன்வைப்பது என்பது அவற்றில் குறிப்படத்தக்கது.
கடந்த 70ஆம் ஆண்டுகளின் பிற்காலத்தில் Coca-cola மற்றும் Pepsi-cola சீன சந்தையில் நுழைந்தன. விரைவில் சீன குளிர் பான சந்தையில் அவை பெரிய பங்கு பெற்றுள்ளன. பல ஆண்டுகளாக இவ்விரு கூட்டு நிறுவனங்கள் சீனாவில் இருந்த போதிலும், பரந்துபட்ட கிராம சந்தையை வளர்க்கவில்லை என்பதை ஆராய்ச்சி மூலம் சுங் சிங் ஹொவ் கண்டறிந்தார். இந்த பெரிய வணிக வாய்ப்பைப் பற்றிக் கொண்டு, 8 ஆண்டுகளுக்கு முன் Fei Chang-cola Wahaha குழுமம் முன்வைத்து, Coca-cola மற்றும் Pepsi-cola கூட்டு நிறுவனத்துக்கு சவாலை விடுத்தது.
கிராம சந்தையை வளர்க்கும் போது, தரத்தை உத்தரவாதம் செய்யும் அதே வேளையில், உற்பத்தி செலவு பல நடவடிக்கைகளின் மூலம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், சீன விவசாயிகள் குறைவான விலையில் Fei Chang-cola வாங்கலாம். மேலும், விற்பனையாளருக்கு போதுமான லாபம் கிடைக்கும். இதன் விளைவாக, சீனர் உற்பத்தி செய்யும் Fei Chang-cola கடையின் கண்ணைக் கவரும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது, Fei Chang-colaவின் ஆண்டு விற்பனை அளவு 6 லட்சம் டன்னைத் தாண்டியுள்ளது. சீனாவின் நகரங்களிலும் வளர்ந்த இடங்களிலும் Coca-cola மற்றும் Pepsi-cola மேம்பாட்டு இடத்தில் வகித்த போதிலும், பரந்துபட்ட கிராம சந்தை Wahaha குழுமத்தின் Fei Chang-colaவினால் ஆதிக்கப்பட்டுள்ளது.
1 2 3
|