உள்நாட்டின் சந்தையில் வெற்றி பெற்ற பின், colaவின் ஊரான அமெரிக்காவில் சுங் சிங் ஹொவ் பார்வை செலுத்துகிறார். 2004ஆம் ஆண்டின் ஏப்ரல் திங்களில், 9 லட்சம் போட்டல் Fei Chang-cola அமெரிக்காவுக்கு ஏற்றிச் சென்று விற்கப்பட்டன. அந்த முயற்சி வெற்றி பெற்றது. இப்போது, Fei Chang-cola விற்பனை செய்ய பல அமெரிக்க கூட்டு நிறுவனங்கள் விரும்புகின்றன என்று சுங் சிங் ஹொவ் செய்தியாளரிடம் கூறினார்.
Wahaha குழுமத்தில் இயக்குநர் குழு இல்லை. துணை தலைமை மேலாளர்களும் இல்லை. தலைமை இயக்குநராகவும் பொது மேலாளராகவும் சுங் சிங் ஹொவ் இருக்கிறார். தொழில் நிறுவனத்தின் அனைத்து விவகாரங்கள் பற்றியும் அவர் ஒருவர் தான் முடிவு எடுக்கிறார். தனிச்சிறப்பு வாய்ந்த அவரது நிர்வாக முறையை Wahaha குழுமத்தின் தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.
Hui Yuan குழுமம், சீனாவின் பெரிய ரக குளிர் பான தொழில் நிறுவனமும் ஆகும். ஆனால் அதன் தலைமை இயக்குநரும் ஆளுநருமான ஜு சின் லியின் நிர்வாக முறை, சுங் சிங் ஹொவை ஒப்பிட்டு பார்க்கும் போது, வித்தியாசமாக இருக்கிறது. பல அதிகாரங்களை துணை ஆளுநரிடம் அவர் வழங்குகிறார். இருந்த போதிலும், சுங் சிங் ஹொவின் நிர்வாக முறையை அவர் வெகுவாக பாராட்டுகிறார். நுணுக்கத்தில் கவனம் செலுத்தும் தலைவராக சுங் சிங் ஹொவ் இருக்கிறார் என்று அவர் கருதுகிறார்.
2005ஆம் ஆண்டில் புதிய உற்பத்தி பொருட்களை Wahaha குழுமம் தொடர்ந்து வளர்க்கும். அதே வேளையில், அன்றாட பன்பாட்டு வேதியியல் தொழில் துறை, வீட்டு மற்றும் நில உடைமை துறை உள்ளிட்ட புதிய துறைகளில் அது நுழையும் என்று சுங் சிங் ஹொவ் எமது செய்தியாளரிடம் கூறினார். 1 2 3
|