
திபெத் தன்னாட்சிப் பிரதேசம்
திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் சட்ட மன்றமான மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டியின் உறுப்பினப் Bai Zhao செய்தியாளருக்குப் பேட்டி அளித்தார். சொந்த இன, சொந்த பிரதேச உள் விவகாரங்களை தாங்களே நிர்வகிப்பகிலும், பொருளாதார உற்பத்தி சுயமாக வளர்ப்பதிலும் தேசிய இனத் தன்னாட்சிப் பிரதேசங்களுக்கு, தன்னாட்சி உரிமை உள்ளன. இது தவிர, சொந்த இனம் மற்றும் உள்ளூர் தனித்தன்மைக்கிணங்க, உள்ளூருக்கு ஏற்ற தன்னாட்சி விதிகளை வகுக்கலாம் என்றார் அவர்.

திபெத் இன மகளிர்
"திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் முதலாவது மக்கள் பேரவை நிறுவப்பட்ட பின், தன்னாட்சிப் பிரதேச மக்கள் பேரவையும் அதன் நிரந்தரக் கமிட்டியும் 237 வட்டார சட்டவிதிகளையும் இதர தீர்மானங்கள் மற்றும் முடிவுகளையும் நிறைவேற்றியுள்ளன. தன்னாட்சிப் பிரதேசத்தின் பொருளாதாரம், அரசியல், சமூகம், பண்பாடு முதலிய துறைகளின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கு அவை சட்ட உத்தரவாதம் அளித்துள்ளன." என்றார் அவர்.
திபெத் தன்னாட்சிப் பிரதேச மக்கள் பேரவை நிரந்தரக்கமிட்டி வகுத்த "திருமணம் பற்றிய சட்ட" விதிகளில், வட்டார சிறுபான்மை தேசிய இனத்தவர் திருமணம் செய்யும் வயது வரம்பு கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, முன்பு ஒரு மனைவிக்கு பல கணவர்கள், ஒரு கணவருக்கு பல மனைவிகள் என்ற நிலைமை தொடர்ந்து நிலவுவதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது. தவிரவும் தன்னாட்சிப்பிரதேசத்தின் பொருளாதாரம், சமூகம் மற்றும் சூழல் இசைவாக வளர்வதை உத்தரவாதம் செய்யும் வகையில், திபெத் இன மொழியைப் படிப்பது, பயன்படுத்துவது, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது, தொல்பொருள் பாதுகாப்பு ஆகியவை பற்றிய விதிகளையும் தன்னாட்சிப் பிரதேசம் வகுத்திருக்கின்றது.
1 2 3
|